Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க உயரம் அதிகம்.. எங்க உயரம் குறைவு.. இந்திய வீரர்களுக்கு இது தான் பிரச்சனை என்கிறார் ரோஹித்

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் இந்தியா சந்திக்கும் சவால் பற்றி கூறினார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் ஆடுகளங்களிலும், பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி பேசினார் ரோஹித் சர்மா.

பெர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆடுகளங்கள்

பெர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆடுகளங்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் குறித்து பேசிய ரோஹித் சர்மா, "இந்தியா எப்போது வந்தாலும் பெர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆடுகளங்களில் ஆடி விடும். இந்த இரண்டு ஆடுகளங்கள் தான் இந்திய அணிக்கு மிக சவாலானவை" என குறிப்பிட்டார். இந்த ஆடுகளங்களில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். அது இந்திய வீரர்களுக்கு கடும் சோதனையாக இருக்கும். இதை பயன்படுத்த ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா இந்த ஆடுகளங்களில் ஆட வைக்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் உயரம் இல்லை

இந்திய வீரர்கள் உயரம் இல்லை

மேலும், "ஆஸ்திரேலிய வீரர்கள் உயரமானவர்கள். இந்த ஆடுகளங்களின் சூழ்நிலைகளை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்திய வீரர்கள் பொதுவாக அத்தனை உயரம் இல்லை. எங்களுக்கு எளிது இல்லை என்றாலும், இந்த முறை சவாலை ஏற்கிறோம்." என குறிப்பிட்டார்.

எனக்கு வசதியான ஆடுகளம்

எனக்கு வசதியான ஆடுகளம்

ரோஹித் சர்மா, "பிரிஸ்பேன், பெர்த் போன்ற ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸ் எனக்கு வசதியானது தான். ஏனெனில், நான் மும்பையில் சிமெண்ட் ஆடுகளங்களில் பயிற்சி செய்து வளர்ந்தேன்" என கூறினார். ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் சிறந்த பேட்டிங் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சராசரி அதிகம்

ரோஹித் சராசரி அதிகம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் நாட்டில் ரோஹித் இதுவரை 16 ஒருநாள் போட்டிகள் ஆடி 805 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 57.50 ஆகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.

Story first published: Tuesday, November 20, 2018, 19:12 [IST]
Other articles published on Nov 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+