Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ரன் எடுக்க 20 பந்துகளா? இஷான் கிஷனால் கடுப்பான ரோகித்.. நீ அடிச்சி கிழிச்சது போதும்

டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் பொறுமையாக விளையாடியதை பார்த்து கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகி டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து திட்டிய சம்பவம் அரங்கேறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணி பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் இசான் கிஷன் அறிமுக வீரராக களம் இறங்கினார்கள்.

Rohit sharma scolds Ishan kishan takes 20 balls to score first runs

மேலும் கில் மூன்றாவது இடத்தில் விளையாடினார். இதில் ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலே அபாரமாக விளையாடி 171 ரன்கள் விளாசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த நிலையில் கில் 6 ரன்னிலும், ரஹானே 3 ரன்னிலும் வெளியேற விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து அறிமுக போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரிஷப் பண்ட் இடத்தில் இஷான் கிஷன் விளையாடியதால் அவரை போல் ரன் சேர்ப்பார் என ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ முதல் ரன்னை எடுக்க அவ்வளவு தடுமாறினார். ஆடுகளம் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. இதனால் ஜடேஜா மற்றும் இஷான் கிஷன் ரன் சேர்க்க பொறுமையாக நின்றனர். இன்னும் இரண்டரை நாட்கள் இருக்கிறதே என்ற காரணமாக கூட இருக்கலாம். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து இதனை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா இஷான் கீசனை பார்த்து ஒரு ரன் அடிக்க இவ்வளவு தடுமாற்றமா என்று சைகையில் காட்டினார்.

மேலும் டிக்ளேர் செய்துவிடலாம் சீக்கிரம் ஒரு ரன்னாவது அடி என்று சைகையில் இஷான் கிசனுக்கு ரோகித் சர்மா கடுப்பாகி அறிவுறுத்தினார். இதனை புரிந்து கொண்ட இஷான் கிஷன் தனது இருபதாவது பந்தில் ஒரு ரன் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய கணக்கை தொடங்கினார்.

இசான் கிஷன் சிங்கிள் எடுத்ததும் நீங்கள் விளையாடியது போதும் என்று ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இசான் கிஷன் வேகமாக ரன் எடுப்பார் என்பதற்காகத் தான் அந்த இடத்தில் அவரை அணியில் சேர்த்தார்கள். ஆனால் அவர் பொறுமையாக விளையாடியது ரோகித் சர்மாவை கடுப்பாக்கியது.

Story first published: Saturday, July 15, 2023, 0:04 [IST]
Other articles published on Jul 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+