Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஏய்.. என்ன வேலை செஞ்சிருக்க தெரியுமா”.. ரகுவை விட்டு விளாசிய ரோகித்.. பயிற்சியில் காரசார சம்பவம்!

அடிலெய்ட்: அரையிறுதிப்போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்திய அணியின் பயிற்சியின் போது இன்று பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அடிலெய்டிற்கு சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோகித்திற்கு காயம்

ரோகித்திற்கு காயம்

இந்நிலையில் இன்று காலை வலைப்பயிற்சியின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. கேப்டன் ரோகித் சர்மா கையில் காயம் ஏற்பட்டு களத்தில் இருந்தே அழைத்துச்செல்லப்பட்டார். 2 நாட்களில் முக்கிய போட்டி இருக்கும் வேளையில் அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் பதற்றமடைந்தனர். எனினும் சிறிது நேரத்தில் ஐஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டு, ரோகித் மீண்டும் களத்திற்குள் வந்தார்.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, ரோகித் இன்று செய்த மற்றொரு சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது. இந்திய அணிக்கு மறைமுக ஹீராவாக இருப்பவர் ரகு ராகவேந்திரா. த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்டான இவர், கடந்த வங்கதேச போட்டியின் இந்திய வீரர்கள் வழுக்கி விழக்கூடாது என்பதற்காக ஷூக்களை சுத்தம் செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் தான் இன்று ரோகித்தின் காயத்திற்கு காரணமானவர்.

கோபமடைந்த ரோகித்

கோபமடைந்த ரோகித்

ரோகித் சர்மா பேக் ஆஃப் தி லெந்தில் வரும் பந்துகளை வீசுமாறு கூறியிருக்கிறார். அப்படி தொடர்ந்து வீசும் போது திடீரென ரகு ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சற்றும் தயாராக இல்லாத ரோகித் கையிலேயே அடி வாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கூறிய பந்துகளை தவிர்த்து எதற்காக ஷார்ட் பால் போட்டாய் என ரகு ராகுவேந்திராவை விட்டு விளாசியுள்ளார். ரோகித் வார்த்தைகளால் சோகமடைந்த ரகு, ஓய்வறைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

ரோகித்தின் செயல்

ரோகித்தின் செயல்

ரோகித் சர்மா குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு வந்த போது வேறு ஒருவர் த்ரோ டவுன் செய்துள்ளார். அப்போது ரகுவை பற்றி விசாரித்த அவர், உடனடியாக அவரை அழைத்து வரச்சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார். மேலும் தனக்கு பவுன்சர் பந்துகளை வீசுமாறு தானாக கேட்டு பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.

யார் இந்த ராகவேந்திரா?

யார் இந்த ராகவேந்திரா?

கர்நாடாகவை சேர்ந்த ரகு ராகவேந்திரா இந்தியாவின் முன்னணி வீரர்களான சச்சின், தோனி, டிராவிட், கோலி போன்றோருக்கு த்ரோ டவுன் செய்து பயிற்சி தந்திருக்கிறார். நீண்ட காலமாக அணியில் இருக்கும் இவரிடம் சிக்கி பல்வேறு வீரர்கள் இதற்கு முன்னர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 8, 2022, 18:22 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+