Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புல் ஷாட் புலிடா இந்த ஹிட்மேன்.. 31 பந்துகளில் மிரட்டலான அரைசதம்.. பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா!

ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களை விளாசியது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Rohit Sharma scored a 31 ball fifty against Australia in the 3rd ODI at Rajkot

இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - வாஷிங்டன் சுந்தர் இணை களமிறங்கியது. ரோகித் சர்மா - விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் களமிறங்கியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா, 3வது ஓவரில் சிக்சர் விளாசி ஆர்ப்பரித்தார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்சர் விளாசுவதை ரோகித் சர்மா வழக்கமாக வைத்திருந்தார். தொடர்ந்து ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாச, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் வீசிய 7வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 7 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 52வது அரைசதமாகும்.

இவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது. மேலும் 31 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு இது இரண்டாவது அதி வேக அரைசதம். அதேபோல் எதிர்முனையில் அனுபவம் குறைந்த வாஷிங்டன் சுந்தருக்கு பிரஷர் கொடுக்கக் கூடாது என்பதற்காக அதிக பந்துகளை ரோகித் சர்மாவே எதிர்கொண்டது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Wednesday, September 27, 2023, 19:04 [IST]
Other articles published on Sep 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+