Ind v wi - 8 இன்னிங்ஸ் பிறகு அரைசதம் கடந்த ரோகித்.. இருந்தும் தொடக்க வீரராக அபார ரெக்கார்ட்
மும்பை : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்திருக்கிறார். ரோகித் சர்மாவின் பேட்டிங் கடந்த சில காலமாகவே மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரோகித் சர்மா கடைசியாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சதம் அடித்தார். அதன் பிறகு தற்போது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார்.

அதன் பிறகு, ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார். கடந்த எட்டு இன்னிங்ஸில் ரோகித் சர்மா அடித்த அதிகபட்ச ஸ்கோரே 43 ரன்கள் தான். இதில் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் தடுமாறி வந்தார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ரோகித் சர்மா தொடக்க வீராக களம் இறங்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் குன்றியதாக கருதப்பட்டாலும் ஆடுகளம் கடும் சவால்களை கொடுத்தது.இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு ரன் சேர்ப்பதற்கும் கடுமையாக உழைக்க நேர்ந்தது. இதில் ரோகித் சர்மா பொறுப்பாக விளையாடி 106 பந்துகளில் அரைசிதம் கடந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதேபோன்று ஜெய்ஸ்வாலும் அபாரமாக விளையாடி முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்தார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தம் அடித்த அரை சதத்தை சதமாக மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோகித் சர்மா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 39 இன்னிங்ஸில் களமிறங்கி இருக்கிறார்.
இதில் ரோகித் சர்மா ஆறு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடித்து நல்ல ரெகார்ட் வைத்திருக்கிறார்.இந்த ஆடுகளத்தில் கடைசியாக பேட்டிங் செய்வது கடினம் என்பதால் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் குறைந்தது 300 ரன்களுக்கு மேலடித்து இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதற்காக முயற்சித்து வருகிறது.


Click it and Unblock the Notifications