Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓபனரா அதிக ரன்களை குவிச்சுருக்காரு ஹிட்மேன்... போக வேண்டிய தூரம் அதிகம் ப்ரோ...

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய ரோகித் சர்மா 28 ரன்களை அடித்து பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக 5363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை தொடர்ந்துள்ளார் ரோகித் சர்மா.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடிய ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 50 ரன்கள் அடித்தனர்.

அதிக ரன்கள் குவித்த முதல் வீரர்

அதிக ரன்கள் குவித்த முதல் வீரர்

இந்நிலையில் இந்த போட்டியின்மூலம் ஒருநாள் போட்டிகளில் 5,363 ரன்களை அடித்து சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக அதிக ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். கடந்த 2015 ஜனவரி முதல் எடுக்கப்பட்ட இந்த பட்டியலில் 3,762 ரன்களுடன் துவக்க வீரராக அதிக ரன்களை அடித்த வீரர்களில் 5வது வீரர் என்ற பெருமையை ஷிகர் பெற்றுள்ளார்.

5,363 ரன்கள்

5,363 ரன்கள்

இந்த பட்டியலில் 98 போட்டிகளில் விளையாடி ரோகித் சர்மா இந்த சாதனையை எட்டியுள்ள நிலையில் தவான் 89 போட்டிகளில் விளையாடி 5வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் உள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் மார்ட்டின் குப்டில் மற்றும் டேவிட் வார்னர் உள்ளனர்.

காயத்துடன் ஆடிய ரோகித்

காயத்துடன் ஆடிய ரோகித்

இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார் ரோகித் சர்மா. 42 பந்துகளில் விளையாடி 28 ரன்களை அடித்திருந்தார். ஆனால் ஆட்டத்தின் துவக்கத்திலேயே அவரது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியுடனேயே அவர் தனது ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Story first published: Tuesday, March 23, 2021, 23:35 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+