Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி கோலிக்கு அந்த பெருமை இல்லை.. 2 புதிய உலக சாதனையை படைத்த ரோகித் சர்மா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 190/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ரோகித்தின் அதிரடி

ரோகித்தின் அதிரடி

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ரோகித் சர்மா கொடுத்த சிறப்பான தொடக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதும், தூண் போன்று நிலையாக நிலைத்து நின்றார். 44 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களை விளாசியிருந்தார்.

உலக சாதனை படைப்பு

உலக சாதனை படைப்பு

இந்நிலையில் இந்த அரைசதம் மூலம் 2 பிரமாண்ட சாதனைகளை ரோகித் சொந்தமாக்கியுள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதுவரை அவர் 121 இன்னிங்ஸ்களில் 3,443 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 3,399 ரன்களும், 3வது இடத்தில் விராட் கோலி 3,308 ரன்களும் எடுத்து உள்ளனர்.

கோலியின் ரெக்கார்ட் முறியடிப்பு

கோலியின் ரெக்கார்ட் முறியடிப்பு

இதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் உலக சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை கோலி வைத்திருந்தார். அவர் 30 அரைசதங்களை அடித்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா தனது 31வது அரைசதத்தை பூர்த்தி செய்து நம்பர் 1 வீரராக உருவெடுத்தார்.

பாபர் அசாமின் எழுச்சி

பாபர் அசாமின் எழுச்சி

இந்த வரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறார். அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

ரோகித் சர்மா - 31

விராட் கோலி - 30

பாபர் அசாம் - 27

டேவிட் வார்னர் - 23

மார்டின் கப்தில் - 22

Story first published: Saturday, July 30, 2022, 20:47 [IST]
Other articles published on Jul 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+