Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"முழு பூசணியை சோற்றில் மறச்சுட்டாங்களே".. ரோகித் சர்மாவின் மோசமான சாதனை.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

திருவனந்தபுரம்: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரை 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது.

நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 390 ரன்களை சேர்த்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 22 ஓவர்களில் 73 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

2 சதங்கள்

2 சதங்கள்

இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி - சுப்மன் கில் ஆகியோர் தான். ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இவர்களை பார்த்து மகிழ்ச்சியில் உள்ள ரசிகர்கள், ரோகித் சர்மாவை பார்த்து கவலையில் உள்ளனர். இதற்கு காரணம் அவர் செய்துள்ள மோசமான ரெக்கார்ட் தான்.

மோசமான ரெக்கார்ட்

மோசமான ரெக்கார்ட்

நேற்றைய போட்டியில் 49 பந்துகளை சந்தித்த ரோகித் துரதிஷ்டவசமாக அரைசதத்தை கூட பூர்த்தி செய்யாமல் 42 ரன்களுக்கு அவுட்டாகினார். நேற்றும் சதத்தை தவறவிட்டதால், ரோகித் தனது கடைசி 50 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. உலகக்கோப்பை வரும் சூழலில் இப்படியா இருப்பது என வல்லுநர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மிஸ்ஸான சதம்

மிஸ்ஸான சதம்

கை விரல்களில் காயம் ஏற்பட்டு சென்ற ரோகித் சர்மா இலங்கை தொடரில் தான் கம்பேக் தந்தார். அதுவும் முதல் ஒருநாள் போட்டியிலேயே அதிரடியாக ஆடிய அவர் 67 பந்துகளில் 83 ரன்களை குவித்தார். ஆனால் அவரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனினும் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் கலக்கிய அவர் 2023ல் என்ன செய்யப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உலகக்கோப்பை ரெக்கார்ட்

உலகக்கோப்பை ரெக்கார்ட்

2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா ஆடிய ருத்ர தாண்டவத்தை இன்று வரை ரசிகர்கள் மறக்க முடியாது. 9 போட்டிகளில் 648 ரன்களை விளாசி ஆச்சரியம் தந்தார். இதில் 5 சதங்களும் அடங்கும். இந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இன்னும் ஒருபடி மேல் செல்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Monday, January 16, 2023, 9:38 [IST]
Other articles published on Jan 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+