Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லாக்டவுன் நேரம்.. வீட்டில் இருந்து ரோஹித் சர்மா போட்ட ஒரே ஒரு போட்டோ.. ஒரே நாளில் 8 லட்சம் லைக்ஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

Recommended Video

BCCI vows to pay their players despite fears over future of cricket

லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் ரோஹித் சர்மா, குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய தயாராகி வந்தார். அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

அந்த புகைப்படம் 21 மணி நேரத்தில் 8.7 லட்சம் லைக்குகளை அள்ளிக் குவித்தது.

அமெரிக்கா பரிதாபம்

அமெரிக்கா பரிதாபம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 2 ஆயிரம் பேர் வரை இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா பாதிப்பு என்ன?

இந்தியா பாதிப்பு என்ன?

இந்தியாவில் இப்போது தான் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது வரும் நாட்களில் இந்திய மக்கள் கட்டுக்கோப்பாக லாக்டவுனில் இருந்தால் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

மீண்டும் லாக்டவுன்

மீண்டும் லாக்டவுன்

ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் மீண்டும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், இந்தியாவில் ஐபிஎல் தொடர் என எந்த வகையான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

ரோஹித் பகிர்ந்த பதிவு

ரோஹித் பகிர்ந்த பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வீட்டில் தான் முடங்கி உள்ளனர். வீட்டில் தாங்கள் செய்யும் வேலையை வீடியோ, புகைப்படம் எடுத்து பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

என்ன புகைப்படம்?

என்ன புகைப்படம்?

அந்த புகைப்படத்தில் ரோஹித் சர்மா ஷூ லேஸ் கட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தின் கீழே வீட்டில் இருந்தாலும் எந்த சாக்குபோக்கும் சொல்லக் கூடாது. உடற்தகுதியோடு இருங்கள், உள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என கூறி உள்ளார்.

8.7 லட்சம் லைக்ஸ்

உடற்பயற்சி செய்யும் முன் எடுத்த அந்த ரோஹித் சர்மா புகைப்படம் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது. அவர் அந்த புகைப்படத்தை பதிவிட்ட 21 மணி நேரத்தில் 8.7 லட்சம் லைக்குகளை அள்ளி உள்ளது. ரோஹித் ரசிகர்கள் அந்த பதிவை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

Story first published: Saturday, April 11, 2020, 14:44 [IST]
Other articles published on Apr 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+