
குழந்தை பிறந்த செய்தி
தனக்கு குழந்தை பிறந்த செய்தி வந்தவுடன் இந்தியா விரைந்தார் ரோஹித். இதனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்தியா விரைந்த ரோஹித் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அழகான புகைப்படம்
அதற்கேற்ப ரோஹித் சர்மா தன் குழந்தை படத்தை வெளியிட்டார். ஆனால், குழந்தையின் முகம் தெரியாத வகையிலேயே புகைப்படம் எடுத்துள்ளார் ரோஹித். அப்படி இருந்தும் அந்த புகைப்படம் அழகாக இருக்கிறது. அதனால், ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

கரங்களால் பற்றிய குழந்தை
ரோஹித்தின் குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால், ரோஹித் மற்றும் அவரது மனைவி ரித்திகாவின் விரல்களை பற்றி இருக்கிறது. இந்த காட்சியை கண்டவுடன் நம் மனதில் மகிழ்ச்சி பொங்குவதை மறுக்க முடியவில்லை.

மீண்டும் கிரிக்கெட்
தற்போது இந்தியாவில் இருக்கும் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கு முன் இந்திய அணியோடு இணைவார் என எதிர்பார்க்கப் படுகிறது. டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடிய ரோஹித் ஒரு அரைசதம் அடித்து இருந்தார்.

முச்சதம் அடிப்பார்
தற்போது குழந்தை பிறந்த குஷியில் இருக்கும் ரோஹித் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வைத்து வெளுப்பார் என அவரது ரசிகர்கள் இப்போதே கட்டியம் கூறத் துவங்கி உள்ளனர். ஒரு ரசிகர் ரோஹித் முச்சதம் அடிப்பார் என கூறி ஆச்சரிய அதிர்ச்சி அளித்துள்ளார். ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications