சென்னையில் குவாரன்டைன்ல இருக்காரு ஹிட்மேன்... அழகான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்காரு
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 5ம் தேதி துவங்கவுள்ளது.
அதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் மற்றும் தனது மனைவி ரித்திகா சஜ்தே இணைந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.

5ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள நிலையில் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது.

ரோகித் புகைப்படம் வெளியீடு
இதையொட்டி சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் 6 நாட்கள் குவாரன்டைனில் தற்போது ஈடுபட்டுள்ளனர். ஹிட்மேன் ரோகித் சர்மாவும் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள நிலையில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பு
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் காயம் காரணமாக இடம்பெறாத ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரின் இறுதி 2 போட்டிகளில் மட்டும் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இந்த போட்டிகளில் 129 ரன்களை அடித்துள்ளார் ரோகித் சர்மா. இதன் சராசரி 32.25.

டெஸ்ட் தொடரில் ரோகித் பங்கேற்பு
இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் இடம்பெற்றுள்ளார். இந்த தொடரின் விராட் கோலி கேப்டனாக உள்ள நிலையில் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானே பொறுப்பேற்றுள்ளார். இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையிலும் இறுதி 2 போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications