For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் - கங்குலிக்கு பின் இவர்கள்தான்.. ரோகித் - தவான் படைத்த பிரமாண்ட சாதனை.. ரசிகர்கள் பாராட்டு!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் - ரோகித் ஜோடி பெரும் சாதனையை படைத்துள்ளார்.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் சிக்கி மிகவும் மோசமான இலக்கை மட்டுமே இங்கிலாந்து அணி நிர்ணயித்தது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

ஓவல் பிட்ச்-ல் மிகவும் ஸ்விங் இருந்ததால் களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறுமோ என்ற பதற்றம் நிலவியது. ஆனால் அதனை பொய்யாக்கினர் ரோகித் - தவான் ஜோடி. நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த அவர்கள் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். இதனால் 10 ஓவர்களுக்குள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர்.

புது சாதனை படைப்பு

புது சாதனை படைப்பு

இந்நிலையில் இந்த ரன்கள் மூலம் புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பட்டியலில் 4வது ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்கள் 5000 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின், கங்குலி ஜோடி 176 முறை இணைந்து 6,609 ரன்களை அடித்துள்ளனர். இதன்பின்னர் கில் கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 5,372 ரன்களும், ஹெய்னஸ் - க்ரீனிட்ஜ் ஜோடி 5,150 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் தற்போது ரோகித் - தவான் ஜோடி இணைந்துள்ளனர்.

 உலகக்கோப்பை கனவு

உலகக்கோப்பை கனவு

ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடிக்கு வயதாகிவிட்டது. இதுவே இங்கிலாந்தில் அவர்கள் கடைசியாக இணைந்து விளையாடும் சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை வரை நாங்கள் இணைந்து விளையாடுவோம் என நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, July 12, 2022, 21:17 [IST]
Other articles published on Jul 12, 2022
English summary
Rohit sharma - Shikhar dhawan partnership ( இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி பெரும் சாதனையை படைத்துள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+