For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா அமைதியா இருக்காதீங்க.. வழியை கண்டுபிடிங்க.. இப்படி செய்தால் வெற்றி கிடைக்காது.. கங்குலி

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி 20 தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றல் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

தற்போது ரசிகர்களின் கவனம் அனைத்தும் ஐபிஎல் தொடரை நோக்கி சென்று இருக்கிறது. எனினும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் ஒன்று இங்கிலாந்து மண்ணில் காத்திருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

Ganguly on Rohit sharma

இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கங்குலி பேசி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். "வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியை மிகப்பெரிய உயரத்திற்கு ரோகித் சர்மா கொண்டு சென்றிருக்கிறார்."

"அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக ரோகித் சர்மா பெரிய அளவு சோபிக்கவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இது மிகவும் கடினமாக இருக்கும் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இதனை ரோகித் சர்மா எப்படி சமாளிக்க போகிறார் என்ற வழியை அவர் கண்டுபிடிக்க வேண்டும்."

"ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். இந்தியா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக விளையாடுவதில்லை. எனவே இங்கிலாந்து தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான்."

"இதேபோன்று இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து பந்துக்கும் பேட்டை சுற்ற கூடாது. மனதளவில் களத்தில் நின்று நான் பந்தை எதிர்கொள்வேன் என்று பண்ட் நினைக்க வேண்டும். போதிய திறமை இருக்கிறது. ஆனால் அணிக்காக அவர்கள் நான் இருக்கிறேன் என்று எழுந்து நிற்க வேண்டும். விராட் கோலி, ஜெய்ஸ்வால் தவிர மற்ற எந்த வீரரின் சராசரியும் வெளிநாடுகளில் 40 கூட தாண்டவில்லை."

"ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், உங்கள் பேட்டிங் வரிசையில் முதல் ஆறு வீரர்களின் சராசரி குறைந்தபட்சம் ஐம்பதையாவது தொட்டு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் விளையாடும் போது 250, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியாது. குறைந்தபட்சம் ஒவ்வொரு இன்னிங்சிலும் 400, 500 ரன்கள் அடிக்க வேண்டும். பெர்த் டெஸ்ட் போட்டியில் நாம் வெற்றி பெற்றதற்கு நான் 400 ரன்கள் மேல் அடித்தது தான் காரணம்" என்று கங்குலி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 18, 2025, 9:18 [IST]
Other articles published on Mar 18, 2025
English summary
Rohit sharma should find way to win in Test cricket ahead of England series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+