டெஸ்டில் பாஸ் செய்தால் போதுமா? பிளைட் பிடிக்க சென்ற ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ "ஆர்டர்".. பரபரப்பு
சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸ் டெஸ்டில் பாஸ் செய்துவிட்டாலும் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இவர் முழு பிட்னசில் இல்லை என்று கூறி அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துள்ளார்.

உறுதி
இதன் மூலம் இந்திய அணியில் இவர் மீண்டும் இணைவது உறுதியாகி உள்ளது. 14 நாட்கள் ரோஹித் சர்மா தொடர்ந்து கஷ்டப்பட்டு தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்து இருக்கிறார். அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்ற தனது காயத்தில் இருந்து விடுபட்டு உள்ளார். 14 நாட்களும் பெங்களூரில் தங்கி தீவிரமாக இதற்காக கஷ்டப்பட்டுள்ளார்.

சோதனை
இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் எப்படி ஓடுகிறார், எப்படி பீல்டிங் செய்கிறார், எப்படி பேட்டிங் செய்கிறார் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை அனைத்திலும் ரோஹித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார். இதன் முடிவாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இணையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தகவல்
இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி ரோஹித் சர்மா நேற்றே கிளம்பி துபாய் வழியாக ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். ரோஹித் சர்மா தனது பிட்னஸ் டெஸ்டில் பாஸ் செய்துவிட்டாலும் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது ரோஹித் சர்மா கவனமாக இருக்க வேண்டும். அவரிடம் வேகம் குறைவாக இருக்கிறது.

வேகம்
அவர் தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும். கிரிக்கெட் பயிற்சியை கூடுதலாக மேற்கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க வேண்டும். இந்திய அணியுடன் நீண்ட நேரம் வலைப்பயிற்சி செய்ய வேண்டும். இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்.அப்போது தனது பிட்னஸை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசம்
அதோடு இவர் இந்திய அணியில் இணைந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் விளையாட வேண்டும் என்றால் அதற்கு இந்திய அணியின் மருத்துவ குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால் ரோஹித் சர்மா சிறப்பாக வலைப்பயிற்சி செய்ய வேண்டும் . மருத்துவ குழு இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications