Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா ஓய்வு பெறும் போது, வருத்தப்படுவார்.. வயதை விட இது அதிகமாக இருக்கனும்.. கவாஸ்கர் அறிவுரை

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறித்து சுனில் கவாஸ்கர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோஹித் சர்மா, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும்போது, அவரது வயதை விட அதிக ஒருநாள் சதங்களை அடித்திருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2027 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்றும், அப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 90களில் ஆட்டமிழந்த தருணங்களை நினைத்து அவர் வருத்தப்படலாம் என்றும் கவாஸ்கர் கணித்துள்ளார்.

Rohit sharma

தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மா, இதுவரை 35 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். கீமோ பால் வீசிய பந்தில் புல் ஷாட் அடிக்க முயந்து அவுட் ஆனதால், அவர் தனது 36-வது சதத்தை வெறும் 8 ரன்களில் தவறவிட்டார்.

IND vs WI: சிக்சர் அடிப்பதில் இந்திய அணி உலக சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெறியாட்டம்

IND vs WI: சிக்சர் அடிப்பதில் இந்திய அணி உலக சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெறியாட்டம்

இது குறித்து ஜியோஸ்டார் தளத்தில் பேசிய சுனில் கவாஸ்கர், "வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் ரோஹித் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் அவர் சதம் அடிக்கவில்லை. மேலும், அவர் 2027 உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது.

அவர் ஓய்வு பெற முடிவு செய்யும் அந்த நேரத்தில், அவரது வயதை விட அதிக ஒருநாள் சதங்களை அவர் பெற்றிருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். ஒரு வீரர் ஓய்வு பெறும்போது அவரது ஒட்டுமொத்த வயதை விட அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது அவர்களின் சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையையும், பல ஆண்டுகளாக அவர்கள் பராமரித்து வரும் தரத்தையும் காட்டுகிறது. அதனால்தான் ரோஹித் அந்த இலக்கை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

2027 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், தற்போதைக்கு அந்த உலகக் கோப்பை தொடரே தனது முக்கிய இலக்கு என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்காக தனது உடற்தகுதியை மேம்படுத்தி வரும் அவர், அணியில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துள்ளார்.

IND vs WI: இந்த தொடர் முழுவதும் அவர் பேட்டை தொடவில்லை.. இருந்தும் சதம்! ராகுலுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

Also Read

IND vs WI: இந்த தொடர் முழுவதும் அவர் பேட்டை தொடவில்லை.. இருந்தும் சதம்! ராகுலுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

ரோஹித்தின் சமீபத்திய ஆட்ட முறையில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தையும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டைப் போல ஆரம்பத்திலேயே அதிரடியாகத் தொடங்காமல், தற்போது விக்கெட்டின் மதிப்பை உணர்ந்து ரோஹித் சற்று நிதானமாக விளையாடுகிறார். 2023 இல் 117.07 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக் ரேட், 2026 இல் 104.68 ஆகக் குறைந்துள்ளது.

Story first published: Sunday, October 4, 2026, 15:28 [IST]
Other articles published on Oct 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+