மோசமான தோல்வி இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. தோல்வி அடைந்தது எதனால்.. கேப்டன் ரோகித் விளக்கம்
விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்தித்தது .வெறும் 117 ரன்களை மட்டும் தான் இந்திய அணி எடுத்தது.
இதனை ஆஸ்திரேலியா அணி 11 ஓவரிலேயே வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது. இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே படுமோசமாக செயல்பட்டனர்.
இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளது.

மோசமாக இல்லை
இந்த நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய விரக்தியை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இது போன்ற போட்டியை தோற்கும் போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் பேட்டிங் சரியாக விளையாடவில்லை. முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் அடித்த ரன்கள் போதுமானதாக இல்லை. 117 ரன்கள் அடிக்கும் அளவிற்கு இது ஒன்றும் மோசமான விக்கெட் கிடையாது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்து வந்தோம்.

விக்கெட்டுகளை இழந்தோம்
இதன் மூலம் நாங்கள் எந்த இலக்கை எடுக்க நினைத்தமோ அதனை செய்ய முடியாமல் போய்விட்டது.சுப்மன் கில்லை முதல் ஓவரில் இழந்த உடன், நானும் விராட் கோலியும் இணைந்து விரைவாக 30 35 ரன்கள் சேர்த்தோம் ஆனால் அதன் பிறகு என்னுடைய விக்கெட்டையும் பிறகு இரண்டு பேர் அடுத்தடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். இதன் மூலம் நாங்கள் ஆட்டத்தின் பின்னோக்கி சென்று விட்டோம்.இப்படி போட்டியில் பின்னடைவை சந்திக்கும் போது அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கஷ்டம். இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல.

கடும் நெருக்கடி
மிச்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினார். அவர் புதிய பந்தை அற்புதமாக கையாண்டு ஆஸ்திரேலியாவுக்காக விக்கெட் வீழ்த்தி வருகிறார்.அவருடைய பலத்திற்கு தகுந்தால் மாதிரி பந்தை வீசி வருகிறார். புதிய பந்தை நன்றாக ஸ்விங் செய்கிறார். சில பந்து பேட்டிற்கு வராமல் வெளியே செல்கிறது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் மத்தியில் அவர் சந்தேகத்தை ஏற்படுத்துகிறார்.
ஆஸ்திரேலிய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

பாராட்டு
மிட்செல் மார்ஸ் பெரிய ஷாட் ஆடி ரன் சேர்ப்பதில் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனக்குத்தானே அவர் நம்பிக்கையை கொடுத்து விளையாடி வருவது ஆச்சரியத்தை தருகிறது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு எங்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். எதிரணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது அதற்கு தகுந்தால் போல் நாமும் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ரோகித் சர்மா கூறினார்.


Click it and Unblock the Notifications