For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!

தவறாக பந்துவீசியதற்காக ஷர்துல் தாக்கூரை களத்திலேயே ரோகித் சர்மா விளாசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் நன்றாக பந்துவீசிய போதும், ஷர்துல் தாக்கூரை ரோகித் சர்மா கடும் ஆத்திரத்தில் திட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. 3வது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (101) மற்றும் சுப்மன் கில் (112) என இருவருமே சதம் அடித்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவுக்கு தோல்வி பயத்தை காட்டிய முக்கியமான பார்ட்னர்ஷிப்களை உடைத்து ஷர்துல் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

கடுப்பான ரோகித் சர்மா

கடுப்பான ரோகித் சர்மா

இந்நிலையில் ஷர்துலின் பந்துவீச்சுக்கு பின்னால் ரோகித் சர்மாவின் கடுமையான கோபம் இருந்துள்ளது. டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் மிடில் ஆர்டரில் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அப்போது அவர்களை பிரிக்க ஷர்துல் கொண்டு வரப்பட்டார். பவுன்சர் பந்தின் மூலம் மிட்செல் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே டாம் லேதமும் ஷர்துலிடம் சிக்கி வெளியேறினார்.

என்ன காரணம்

என்ன காரணம்

2 விக்கெட்களால் உற்சாகமான அவர், அடுத்த 2 பந்துகளையும் தொடர்ச்சியாக பவுன்சர்களாக வீசினார். இதனை நன்கு அறிந்திருந்த டெவோன் கான்வே சுலபமாக பவுண்டரிகளை அடித்து தள்ளினார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, ஒரே மாதிரி பந்தை போடுவியா? இதுக்கூடவா தெரியாது, 2 பவுண்டரிகள் சென்றுவிட்டது என மிகவும் கோபமாக மைதானத்திலேயே கத்தினார்.

அடுத்த ஓவரே கூல்

அடுத்த ஓவரே கூல்

எனினும் அடுத்த ஓவரிலேயே க்ளென் பிலிப்ஸின் விக்கெட்டை எடுத்து ரோகித்தை நிதானமாக்கினார் ஷர்துல். மொத்தமாக 6 ஓவர்களை வீசிய அவர் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அவர் எடுத்த 3 விக்கெட்களுமே மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது. இதனால் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Wednesday, January 25, 2023, 10:22 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Team India captain Rohit sharma Slams shardul thakur on field after bowled poor delivery in India vs New Zealand 3rd ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+