Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 வயது ஆகிவிட்டது.. அஸ்வின், ஜடேஜா எதிர்காலம் என்ன? ரோகித் சர்மா சொன்ன அதிர்ச்சி தகவல்.. விவரம்

மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் என்ற பெருமையை அஸ்வினும் ஜடேஜாவும் பெற்றனர்.

இதன் மூலம் தொடர் நாயகன் விருதை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொண்டார்கள். டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக ஜடேஜா அஸ்வின் தான் இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டணி நடப்பு தொடரில் மட்டும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. அஸ்வினுக்கு வயது 36 ஆகிறது. இதனால் அஸ்வின் ஜடேஜாவின் எதிர்காலம் என்ன என்று ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர் .

ரோகித்தின் ஆசை

ரோகித்தின் ஆசை

அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் நிச்சயமாக சில ஆண்டுகள் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் எனக்கு தெரியவில்லை. நானும் இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால் 4 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட தருணம். இந்திய அணியின் நல்லதற்காக அவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. அஸ்வினும், ஜடேஜாவும் இந்திய அணிக்காக நீண்ட நேரம் விளையாட கூடியவர்கள்.

விக்கெட் வீழ்த்துவார்கள்

விக்கெட் வீழ்த்துவார்கள்

இருவரும் ஒரு முனையில் தொடர்ந்து ஓவர்களை வீசுவார்கள். எதிரணி விக்கெட்டுகளை எப்படி வீழ்த்தி போட்டியை முடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் ஆசிய ஆடுகளங்களில் அஸ்வின் ஜடேஜா கையில் நீங்கள் பந்தை கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு விக்கெட்டுகளை பெற்று தருவார்கள். இதேபோன்று பேட்டிங்கிலும் இந்திய அணிக்காக முக்கியமான கட்டத்தில் ரன்களை சேர்த்து தருவார்கள்.

இருவரும் தான் காரணம்

இருவரும் தான் காரணம்

எங்கள் அணியின் மிகவும் முக்கியமான வீரர்களாக அஸ்வின், ஜடேஜாவும் இருக்கிறார்கள். இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் எப்படி செயல்பட்டு இருக்கிறோம் என்று பார்த்தால் அதற்கு முக்கிய பாராட்டுக்கள் அஸ்வினையும் ஜடேஜாவையும் தான் சேரும். எங்களுடைய மிகப் பெரிய வெற்றிகளுக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக உங்களுக்கே தெரிந்திருக்கும். இது வெறும் மூன்று நான்கு ஆண்டுகளில் நடந்தது இல்லை.

நீண்ட காலம்

நீண்ட காலம்

கடந்த 10 ஆண்டுகளாக அஸ்வினும் ஜடேஜாவும் தான் இந்திய அணியின் காப்பாற்றி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஒரே மாதிரி இந்த ஜோடி விளையாடி வருகிறது. இவர்கள் இருவரும் தொடர்ந்து அவர்களால் முடியும் வரை இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.ஏனென்றால் அஸ்வின் ,ஜடேஜா ஆகியோர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான விஷயம். எனவே இந்திய அணியின் நல்லதுக்காக தொடர்ந்து அவர்கள் நீண்ட காலம் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என்று ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.

Story first published: Tuesday, March 14, 2023, 16:10 [IST]
Other articles published on Mar 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+