Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 வருட அனுபவம் இருக்கு.. இனிமே பேச்சே கிடையாது.. வீச்சு தான்! பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சூளுரை

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று மாதங்களை அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள். இந்த மூன்று மாதங்களில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்களோ அதை பொறுத்து காலத்தால் அழியாத வரலாறு உருவாகும்.

இதில் முதல் படியாக நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.அனைத்தும் சரியாக நடந்தால் இந்த 15 நாட்களில் இந்தியா பாகிஸ்தான் மூன்று முறை மோத வாய்ப்பு இருக்கிறது.

Rohit sharma speaks about facing Pakistan in asia cup 2023

இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் பாகிஸ்தான அணி மிகவும் அற்புதமாக சமீப காலமாக விளையாடி வருகிறார்கள். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர்களுடைய செயல்பாடு நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.நம்பர் ஒன் இடத்திற்கு வர அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

நாளை நிச்சயமாக நல்ல சவால் எங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தொடக்க வீரர் பேட்ஸ்மேன் ஆக என்னுடைய பணி அணிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் நான் களத்தில் அதிக நேரம் செலவிட முடிவு செய்துள்ளேன். என்னுடைய 16 ஆண்டு கால அனுபவத்தை பயன்படுத்தி விளையாட போகிறேன். என்னுடைய விக்கெட்டை நான் அவ்வளவு எளிதாக இழக்க விரும்பவில்லை.

நான் நல்ல பேட்டிங் மனநிலையில் இருக்கின்றேன். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட வேண்டும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அப்படி கிடையாது. களத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக ரிஸ்க் எடுத்து விளையாடினேன். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவ்வளவு ரிஸ்க் எடுக்க தேவையில்லை.

அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது தான். என்னுடைய தலையான பொறுப்பு உலகக் கோப்பை தொடர்க்கு முன்பு சில விஷயங்களை நாங்கள் சரி செய்ய உள்ளோம். அந்தப் பணியை ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் செய்வோம். பும்ரா உடல் தகுதியுடன் இருக்கிறார். அது நிச்சயமாக எங்களுக்கு நல்ல விஷயம் தான். ஆசிய கோப்பை என்பது மிகப்பெரிய தொடர்.

இதற்கு என்ன தனி வரலாறு இருக்கிறது. இதனால் இதனை வீரர்களுக்கான ஒரு உடல் பயிற்சி சோதனையாக நிச்சயம் பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் அதையெல்லாம் பெங்களூரில் கடந்த வாரமே முடித்து விட்டோம். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Friday, September 1, 2023, 19:36 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+