அரைசதம் அடித்ததில் சந்தோசம் இல்லை.. நெதர்லாந்து வெற்றிக்கு பிறகு முக்கிய கருத்து.. ரோகித் பேச்சு
சிட்னி : ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் விளாசி அசத்திருக்கிறார்கள்.

அதிர்ஷ்டம் தான்
முதலில் வெற்றி குறித்து ரோகித் சர்மாவிடம் ஹர்ஷா போக்லே கேள்வி எழுப்பினார். அப்போது பாகிஸ்தான் போன்ற கடினமான ஆட்டத்திற்கு பிறகு எப்படி இந்த போட்டிக்கு தயாரானீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோகித் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சில நாட்கள் ஓய்வு கிடைத்தது. சிறந்த வெற்றிக்கு பிறகு இந்த ஓய்வு எங்களுக்கு மிகவும் உதவியது.

2 புள்ளிகள் முக்கியம்
பாகிஸ்தான் போட்டி முடிந்த உடனே நாங்கள் சிட்னி வந்து பயிற்சி தொடங்கி விட்டோம். அந்த வெற்றியில் இருந்து நாங்கள் நகர்ந்து வந்து விட்டோம். எங்களுடைய குறிக்கோள் அடுத்த போட்டியின் மீது தான் இருந்தது. நெதர்லாந்து எதிரான போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என கவனம் செலுத்தினோம்.நெதர்லாந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதியான முறையை பாராட்டத்தக்க விஷயமாகும்.

முடிவு எடுத்தோம்
இந்த ஆட்டத்தில் நாங்கள் எப்படி விளையாடி வெற்றி பெற வேண்டும் என யோசித்தோம். எங்களுடைய எதிர் அணி யார் என்பதெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. இன்றைய ஆட்டம் எங்களுக்கு கிட்டத்தட்ட முழு திருப்தியை அளித்தது. தொடக்கத்தில் நாங்கள் கொஞ்சம் மெதுவாக விளையாடினோம். ஆடுகளம் தோய்வாக இருந்ததால் முதலில் பார்ட்னர்ஷிப் அமைத்து, பிறகு அதிரடியாக விளையாட வேண்டும் என நானும் விராட் கோலியின் முடிவு எடுத்தோம்.

ரொம்ப சந்தோசமில்லை
நான் அடித்த அரைசதம் குறித்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இல்லை.
ஆனால் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியமாகும்.அந்த ரன் நல்ல முறையில் வந்ததா இல்லை மோசமான முறையில் வந்தது எல்லாம் என்பது குறித்து கவலை இல்லை. ரன்கள் அடிப்பதன் மூலம் வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்கும் என்று ரோகித் சர்மா கூறினார். இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை பெர்த் நகரில் விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications