Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாற்றம்.. முன்னேற்றம்.. ரோகித் சர்மா ! தோல்வி குறித்து ரோகித் சொன்ன ஷாக்கிங் பதில்

இந்தூர் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி ரூசோவ்வின் அதிரடி சதத்தால் 227 ரன்கள் விளாசியது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.

அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்களும், தீபக் சாஹர் 31 ரன்களும் எடுக்க, இந்திய அணி 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரோகித் பதில்

ரோகித் பதில்

இந்திய அணியின் தோல்விக்கு, ஃபில்டிங்கும் , பந்துவீச்சும் காரணம் என கருதப்படுகிறது. டி20 உலககோப்பை தொடருக்கு முன் இந்தியா கடைசியாக விளையாடும் போட்டி என்பதால், ரசிகர்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால், ரோகித் சர்மாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு தான் அவர் நான் முடிவை பற்றி கவலையே பட மாட்டேன் என்று கூலாக பதில் தந்து இருக்கிறார்.

கவலையில்லை

கவலையில்லை

அவர் பேசியதாவது, நாங்கள் அணி கூட்டத்தில் முடிவு பற்றியே சே மாட்டோம். யோசிக்க மாட்டோம். வெற்றி, தோல்வியை விட ஒவ்வொரு போட்டியிலும் என்ன கற்கிறோம்.. எதிந் முன்னேற்றம் பெறுகிறோம் என்பதில் மட்டுமே கவனம் இருக்கும்.எங்களுடைய பேட்டிங்கில் குறை இல்லை. எங்களுடைய பந்துவீச்சு தான் பிரச்சினையே.

முன்னேற்றம்

முன்னேற்றம்

பந்துவீச்சில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். நாங்கள் 2 சிறந்த அணியை எதிர்கொண்டு விளையாடினோம். இரண்டு தொடரிலுமே பல சவால்களை எதிர்கொண்டோம். இன்னும் நாங்கள் எந்த எந்த துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று பார்த்து வருகிறோம். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கிறது.

புரிதல் இல்லை

புரிதல் இல்லை

இன்னும் எங்கள் அணியை கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது. சில வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புரிதல் இல்லை. அவர்களுக்கு அதை தெளிவுப்படுத்தி புரிய வைப்பதே என்னுடைய பணி என்று அவர் கூறினார். சூர்யகுமார் யாதவின் பார்ம் கொஞ்சம் கவலையாக இருக்கிறது என்று சிரித்தப்படியே கூறிய ரோகித் கிண்டல் அடித்தார்.

Story first published: Wednesday, October 5, 2022, 0:29 [IST]
Other articles published on Oct 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+