வாட்டும் தனிமை.. தனியறையில் மாட்டிய ரோஹித் சர்மா..விடாமல் துரத்தும் சிட்னி கிளஸ்டர்.. பரபர பின்னணி!
சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா தற்போது ஆஸ்திரேலியாவில் தனியறையில் கஷ்டப்பட்டு வருகிறார். எங்கும் வெளியே செல்ல முடியாமல் இவர் தனியறையில் அவதிப்பட்டு வருகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இவர் முழு பிட்னசில் இல்லை என்று கூறி அணியில் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்தார்.இதன் மூலம் இந்திய அணியில் இவர் மீண்டும் இணைவது உறுதியாகி உள்ளது.

ரோஹித் சர்மா
14 நாட்கள் ரோஹித் சர்மா தொடர்ந்து கஷ்டப்பட்டு தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்து இருக்கிறார். அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்ற தனது காயத்தில் இருந்து விடுபட்டு உள்ளார். 14 நாட்களும் பெங்களூரில் தங்கி தீவிரமாக இதற்காக கஷ்டப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா
தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இவர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் ஒரு வாரம் இவர் ஆஸ்திரேலியாவில் தனிமையில் இருக்க வேண்டும். இவருக்கு பெரிய இரண்டு பெட் ரூம் அறை கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம்
மொத்தமாக ரோஹித் சர்மா 14 நாட்கள் தனி அறையில் இருக்க வேண்டும். அதன்பின்பே அவர் பயிற்சி மேற்கொள்ள முடியும். முன்னதாக ரோஹித் சர்மா தனிமைப்படுத்தப்பட்டாலும் சிட்னி சென்று அங்கு இருக்கும் மைதானத்தில் பயிற்சி மட்டும் தனியாக மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கும் வழி இல்லாமலா சென்று விட்டது ,

என்ன நடந்தது
அதன்படி சிட்னியில் தற்போது தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. சிட்னி கிளஸ்டர் என்ற வேகமாக பரவி வருகிறது. புதிதாக அங்கு பலருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மா சிட்னியில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மோசமான நிலை
இதனால் தற்போது ரோஹித் சர்மா மிக மோசமாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அவர் தனியறையில் இருக்கிறார். பயிற்சியும் மேற்கொள்ள முடியவில்லை. மன ரீதியாக இது அவரை பெரிதாக பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications