அப்படி போடு... 218 சிக்சர்கள்… தோனியை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா..!
Recommended Video

மொகாலி: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்குத்தள்ளி ஹிட்மேன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சூப்பர் துவக்கம்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக, ஹிட்மேன் ரோகித் சர்மா தமது 40வது ஒரு நாள் அரைசதத்தை அடித்தார்.

வாய்ப்பு போனது
பின்னர், அதிரடியாக விளையாடிய அவர் 92 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை ரோகித் தவற விட்டார்.

ரோகித் சாதனை
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்ததன்மூலம், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மொத்தம் 218 சிக்சர்கள் அடித்தார். அதன் மூலம், இந்திய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார்.

தோனிக்கு 2வது இடம்
இவருக்கு அடுத்த இடத்தில் 217 சிக்சர்களுடன் தோனி உள்ளார். தோனி மொத்தம் 224 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில், 7 சிக்சர்கள் ஆசிய லெவன் அணிக்காக அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications