ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவு.. இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் விழுந்த அடி.. சின்ன தவறால் பாதிப்பு
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எடுத்த ஒரு தவறான முடிவு பெரும் சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாம் நாளுக்கு பிறகு தான் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து நிதானமாக விளையாடி வருகிறது.

நிதான ஆட்டம்
ட்ராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, மார்னஸ் லாபசேன் மூன்று ரன்களிலும் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களிலும்,பீட்டர் ஹான்ஸ்கோப் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து உஸ்மான் கவாஜா பொறுப்பாக விளையாடி 250 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார். இதைப் போன்று கேமிரான் கிரீன் 64 பந்துகள் எதிர்கொண்டு 49 ரன்கள் எடுத்திருந்தார்.

கட்டுப்படுத்திய இந்தியா
இந்த நிலையில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 80 ஓவர் முடிந்த பிறகு புதிய பந்து மாற்றப்படும். பந்து பழசாக மாறியதால்,ரிவர் ஸ்விங் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவின் ரன் அடிக்கும் வேகத்தை குறைத்தனர். இதன் காரணமாக 80 ஓவர் ஆஸ்திரேலியா அணி வெறும் 190 ரன்கள் என்ற அளவில் தான் இருந்தது.

தவறான முடிவு
இந்த நிலையில் புதிய பந்தை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் விடுவதும் கேப்டன்கள் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. சில கேப்டன்கள் புதிய பந்தை தாமதப்படுத்தி பழைய பந்தை வைத்து நெருக்கடி கொடுப்பார்கள். ரோகித் சர்மாவும் அப்படி ஒரு முடிவை தான் எடுப்பார் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் ரோகித் சர்மா 81 வது ஓவரிலே புதிய பந்தை எடுத்துக் கொள்வதாக கூறினார்.

இந்தியாவுக்கு சரிவு
இதனால் அதுவரை அமைதி காத்திருந்த ஆஸ்திரேலியா அணி ரோஹித் சர்மா புதிய பந்தை எடுத்தவுடன் அதிரடி காட்டியது. குறிப்பாக கேமரான் கிரீன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 ஓவரில் ரன்கள் குவித்தது. இது குறித்த கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் மற்றும் முரளி கார்த்திக் ரோகித் சர்மா பந்தை தாமதப்படுத்தாமல் எடுத்தது தவறாக முடிந்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications