For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி.. 10 நாட்களுக்கு முன்பே அணியை அறிவித்த ரோகித்.. செம திட்டம்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வரும் 23ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி 10 நாட்களுக்கு முன் பெர்த் நகரில் முகாமிட்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

இந்த நிலையில் இந்திய அணி வரும் 17ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19ஆம் தேதி நியூசிலாந்து அணி உடனும் பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது.

உடன்பாடு இல்லை

உடன்பாடு இல்லை

கடந்த முறை பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி தழுவியதால் இம்முறை வெற்றி பெற வேண்டிய உத்வேகத்துடன் ரோகித் சர்மா படை உள்ளது. இதனால் பாகிஸ்தான் போட்டிக்கு 8 நாட்கள் இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்து விட்டதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது கடைசி நேர பயிற்சியில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

அறிவித்து விட்டேன்

அறிவித்து விட்டேன்

அதன் மீது நம்பிக்கை இல்லை. நாங்கள் ஏற்கனவே பாகிஸ்தான் எதிரான என்னுடைய பிளேயிங் லெவனை முடிவு செய்து விட்டேன். யார் யாரெல்லாம் அணியில் இருக்கப் போகிறீர்கள் என்பது குறித்தும் வீரர்களுக்கு அறிவித்து விட்டேன். ஏனென்றால் அவர்கள் மனதளவில் தங்களை தயார் படுத்திக் கொள்ள இந்த நாட்கள் உதவும் என்று ரோகித் சர்மா கூறினார்.

அனுபவம்

அனுபவம்

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அனைத்து டி20 உலக கோப்பையிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தான் முதல் முறையாக டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டபோது என்னைப் பற்றி எனக்கே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சென்றேன் .முதல் உலகக் கோப்பை என்பதால் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என முடிவு செய்து விளையாடினேன்.

காலம் மாறிவிட்டது

காலம் மாறிவிட்டது

உலககோப்பை குறித்து எனக்கு அப்போது எவ்வித புரிதலும் இல்லை. முன்பு இருந்த டி20 போட்டிகளுக்கும் தற்போதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் 140 ,150 ரன்கள் அடித்தாலே வெற்றி பெற்று விடலாம். ஆனால் இப்போது 140 ரன்களை 13 வது ஓவரிலே வீரர்கள் எட்டி விடுகிறார்கள் .இம்முறை ரிஸ்க் எடுத்து விளையாட இருக்கிறோம். முடிவு பற்றி கவலை இல்லை. நீங்கள் ரிஸ்க் எடுத்தால் உங்களுக்கு நல்ல நன்மை கிடைக்கும். அதுதான் டி20 கிரிக்கெட் போட்டியில் உள்ள மகிமையே என்று ரோஹித் சும்மா கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 15, 2022, 18:55 [IST]
Other articles published on Oct 15, 2022
English summary
Rohit sharma talks about playing xi vs pakistan in opening match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+