Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாட்ரிட் மைதானம் நடுவினிலே.. மனைவியுடன் போட்டியை கண்டு களிக்கையிலே.. ரோஹித் ஹேப்பி அண்ணாச்சி!

மாட்ரிட் : ஸ்பெயினில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா லா லிகா கால்பந்து போட்டியை கண்டுகளித்தார்.

ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள சாண்டியாகோ பெர்னபியூ மைதானத்திற்கு தன்னுடைய மனைவியுடன் சென்ற ரோகித் சர்மா, அவருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் லா லிகா மற்றும் ரியல் மாட்ரிட்ற்கு நன்றி தெரிவித்துள்ள ரோகித் ஷர்மா, தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் சிறப்பாக கனவுஅனுபவத்தை கொடுத்ததற்கும் பாராட்டு தெரிவித்தார்.

ரோகித் சர்மா கொண்டாட்டம்

ரோகித் சர்மா கொண்டாட்டம்

கடந்த நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கணுக்காலில் காயம் பட்டு வெளியேறிய இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தொடர்ந்து சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இடம்பெறாமல் சொந்த நாட்டிற்கு திரும்பினார். தன்னுடைய காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டுவரும் ரோகித் சர்மா குணமடைந்து வருவதால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம்

ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம்

இந்திய அணிக்காக நியூசிலாந்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் சொதப்பிய நிலையில், தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ரோகித் சர்மா, தற்போது அவர் ஸ்பெயினின் மாட்ரிட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா -ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டியை அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் கண்டுகளித்தார்.

கனவு ஆட்டம் என பாராட்டு

இதனிடையே பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் இடையிலான போட்டியை குடும்பத்தினருடன் கண்டுகளித்தது மிக சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் இதற்கென லா லிகாவிற்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கனவு ஆட்டத்தை பார்த்தது மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியுடனான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாரம்பரிய சுரங்கத்தில் ரோகித்

மாட்ரிட்டின் அடையாளங்களில் சிறப்பானதாக திகழும் வரலாற்று சின்னமான சுரங்கத்திற்கு சென்ற ரோகித், அதிலிருந்து உற்சாகத்துடன் தான் வெளிவரும் விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஜெர்சிக்களையும் அவர் கண்டு களித்தார். மேலும் சாண்டியாகோ பெர்னபியூ மைதானத்திற்கு தன்னுடைய மனைவியுடன் சென்ற ரோகித் சர்மா, அவருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புகைப்படம் வெளியீடு

புகைப்படம் வெளியீடு

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோகித்தின் மனைவி ரித்திகா சச்தேவும், ரோகித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரோகித்தின் கனவு என்று கேப்ஷனை வெளியிட்டு சிவப்பு இதய ஸ்டிக்கரையும் பதிவிட்டுள்ளார்.

ஹிட்மேன் என்று புகழாரம்

முன்னதாக லா லிகாவின் எல் கிளாசிகோ ஆட்டத்தை காண தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பதிலளித்துள்ள லா லிகா, அவரை ஹிட்மேன் என்று குறிப்பிட்டு என்ஜாய் என்றும் தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் 2க்கு 0 என்ற கணக்கில் பார்சிலோனாவை ரியல் மாட்ரிட் வெற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 17, 2020, 20:47 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+