சச்சின் சாதனையை முறியடிக்கும் ரோகித்.. கோலியால் கூட முடியவில்லை.. முதல் ODIல் உள்ள சுவாரஸ்யம்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைக்க காத்துள்ளார்.
Recommended Video
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டம்
இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று சொதப்பலாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஏமாற்றிய அவர், இங்கிலாந்துடனான டி20 தொடரிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் அவரின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ரோகித் சர்மா சாதனை
இந்நிலையில் இன்று அந்த விமர்சனங்களுக்கு ரோகித் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு சதம் அடித்தாலும் கூட, ஒரு அயல்நாட்டு களத்தில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைப்பார். தற்போது வரை 4 வீரர்கள் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர்.

சாதனை விவரங்கள்
தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் இந்திய மண்ணில் 7 சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாஹீத் அன்வர் ஆகியோர் அமீரகத்தில் 7 சதங்களை அடித்துள்ளனர். இதே போன்று ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் இதுவரை 7 சதங்களை அடித்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தாலும், சச்சின், டிவில்லியர்ஸ் ஆகியோரை முந்துவார்.

அதிரடி ஆட்டம்
ரோகித் சர்மா எப்போதுமே ஆட்டத்தின் முதல் சில நேரங்களுக்கு நிதானமாக விளையாடுவார். அரைசதம் அடித்த பிறகு தான் அவரின் அதிரடியே இருக்கும். ஆனால் சமீப காலமாக ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே ரோகித் அதிரடியாக ஆடி வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவரின் ஆட்டத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications