Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாளைக்கு 1 கோடி!! உலகக்கோப்பை சரவெடிக்குப் பின் எகிறிய இந்திய வீரரின் விளம்பர வருவாய்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரரும் துவக்க ஆட்டக்காரருமான ரோகித் ஷர்மாவின் நேர்த்தியான பேட்டிங் கிரிக்கெட் உலகில் அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்துள்ளது. இதனால் அவரை தங்களுடைய பிராண்டிற்கு விளம்பரத் தூதராக்க பலர் போட்டியிடுகின்றனர்.

இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா, இளைஞர்கள் மற்றும் குடும்ப ஆடியன்சுகளுக்கு மிகவும் விருப்பமானவராக இருப்பவர். உலக கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசியதன்மூலம் இவர் ரசிகர்களுக்கு விருப்பமானவராக மாறியுள்ளார்.

இதனால் இவர் தற்போது பல்வேறு பிராண்டுகளின் விளம்பர தூதராக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தங்களில் இவர் தற்போது கையெழுத்திட்டுள்ளார். மேலும் ஒருநாளைக்கு விளம்பரங்களில் நடிப்பதற்காக இவர் ஒரு கோடி ஊதியமாக பெறுகிறார்

 ரசிகர்களை கவர்ந்த ரோகித் ஷர்மா

ரசிகர்களை கவர்ந்த ரோகித் ஷர்மா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துவக்க ஆட்டக்காரராக விளங்கிவரும் ரோகித் ஷர்மா, தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

 அதிகரித்துள்ள ரோகித்தின் ரசிகர் வட்டம்

அதிகரித்துள்ள ரோகித்தின் ரசிகர் வட்டம்

உலக கோப்பையில் இந்தியா கோப்பையை தவறவிட்டாலும் ரோகித் ஷர்மா அடித்த 5 சதங்களின் மூலம் அவருக்கு சர்வதேச அளவில் உள்ள ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

 விளம்பர தூதராக்க போட்டி

விளம்பர தூதராக்க போட்டி

இந்தியாவின் துணை கேப்டனாகவும் இருந்து அணியை வழிநடத்திவரும் ரோகித் ஷர்மாவின் தனிப்பட்ட சாதனைகள் மூலம் அவரை தங்களது பிராண்ட்களின் விளம்பர தூதராக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போடுகின்றன.

 ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கு ஒப்பந்தம்

ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கு ஒப்பந்தம்

இந்நிலையில் இவர் தற்போது சியட் டயர்ஸ், அடிடாஸ், ஹப்லாட் வாட்ச்சுகள், ரஸ்னா உள்ளிட்ட 20 நிறுவனங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம் ஆண்டிற்கு 75 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இவருக்கு கிடைக்கும்.

 அதிகரித்த வருமானம்

அதிகரித்த வருமானம்

இளைஞர்கள் மற்றும் குடும்ப அளவிலான ரசிகர்களை அதிகமாக கொண்டுள்ள ரோகித் ஷர்மா, ஒரு நாளைக்கு விளம்பரங்களில் நடிக்க ஒரு கோடி ரூபாய் கேட்கிறார். இதை தருவதற்கு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. உலக கோப்பைக்கு பின்பே இவரது விளம்பர வருமானம் உயர்ந்துள்ளது.

Story first published: Monday, December 2, 2019, 18:22 [IST]
Other articles published on Dec 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+