For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிட்னியில் கொரோனா பாதிப்பு... சீக்கிரத்திலேயே இந்திய அணியோட சேரவிருக்கும் ரோகித் சர்மா!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் வரும் சனிக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

தற்போது சிட்னியில் குவாரன்டைனில் உள்ள ரோகித் சர்மா 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடவுள்ளார்.

சிட்னியில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், அவர் வரும் 30ம் தேதிக்குள் இந்திய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

26ல் டெஸ்ட் போட்டி

26ல் டெஸ்ட் போட்டி

வரும் 26ம் தேதி மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி, துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் பௌலர் முகமது ஷிம் ஆகிலேயார் பங்கேற்காத நிலையில் ரஹானே இந்த அணியை வழிநடத்த உள்ளார்.

சிட்னியில் ரோகித் சர்மா

சிட்னியில் ரோகித் சர்மா

இந்நிலையில், சிட்னியில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவிவருகிறது. ஏற்கனவே காயம் காரணமாக சிட்னியில் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சிட்னியில் உள்ள ரோகித் சர்மாவும் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

மாற்றத்திற்கு அவசியமில்லை

மாற்றத்திற்கு அவசியமில்லை

ஆனால் சிட்னியில் பாதுகாப்பாக ரோகித் சர்மா உள்ளதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 44,000 கொரோனா பரிசோதனையில் 8 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு உள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டது.

சிட்னியில் நடைபெறுமா?

சிட்னியில் நடைபெறுமா?

இதனிடையே, 3வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அங்கு பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், மெல்போர்ன், அடிலெய்ட் அல்லது பிரிஸ்பேனில் 3வது போட்டி நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

30க்குள் இணையும் ரோகித்

30க்குள் இணையும் ரோகித்

இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டுவரும் ரோகித் சர்மா வரும் 30ம் தேதிக்குள் இந்திய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி துவங்கவுள்ள நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அவர் பயிற்சி முகாம்களில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 23, 2020, 15:28 [IST]
Other articles published on Dec 23, 2020
English summary
The Ajinkya Rahane-led Indian side is gearing up for the second Test vs Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+