Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவி போய்விடுமா? இதான் ட்விஸ்ட்.. ரோஹித் சர்மாவுக்கு குட் நியூஸ்.. பிசிசிஐ அதிரடி முடிவு

மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியை விட்டு நீக்கப்படுவார் என பரவலாக கூறப்பட்டு வந்தது. குறிப்பாக டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்த அவர் நீக்கப்பட்டு பும்ரா அல்லது வேறு ஒருவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.

இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. ரோஹித் சர்மா அந்த தொடரின் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் சேர்த்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்தார். அதன் பின் எல்லாமே மாறியது.

Rohit Sharma to Lead India in England Test Series BCCI s Decision

தற்போது ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர். ஜூன் மாதம் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கான கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் இருந்தது.

இந்த நிலையில்தான் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து அந்த நல்ல செய்தி வந்துள்ளது. ரோஹித் சர்மா தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போகிறார் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவை விட்டால் அணியை வழிநடத்தும் சிறந்த கேப்டன் யாரும் இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான்.

அடுத்த கேப்டனை அடையாளம் காணும் வரை ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முக்கியமானது என்பதால் அந்த நேரத்தில் புதிய கேப்டனை நியமித்து பரிசோதனை முயற்சிகளை செய்ய முடியாது என்பதாலும், ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி வென்று இருப்பதால் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும் வீரர்களும் அவர் மீது அதிக மதிப்பு வைத்துள்ளனர்.

அதனால் சிறந்த தலைமைப் பண்பு உடையவர் என்ற அடிப்படையில் ரோஹித் சர்மாவையே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்தத் தொடருக்குப் பிறகு வேண்டுமானால் ரோஹித் சர்மாவின் செயல்பாட்டை வைத்து அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் முயற்சிகள் நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு ரோஹித் சர்மா தான் டெஸ்ட் அணி கேப்டன்.

Story first published: Saturday, March 15, 2025, 10:20 [IST]
Other articles published on Mar 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+