For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரமாஸ்திரத்தை கையில் எடுத்த ரோகித்.. 4வது டெஸ்டில் விடுவதாக இல்லை.. வெற்றி பெற புதுவித முயற்சி!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா புதிய முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கடினமான ஸ்கோரை கொடுத்துள்ளது.

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சீரான வேகத்தில் சரிந்துவிட 170 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்துவிட்டது. எனினும் 5 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் அட்டகாசமான பார்டர்னர்ஷிப்பை அமைத்தனர்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

உஸ்மான் கவாஜா 180 ரன்களும், அவருக்கு உறுதுணையாக நின்ற கேமரூன் கிரீன் 114 ரன்களையும் குவித்தனர். இவர்களின் 208 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்துள்ளது. ஆனால் இந்த ஸ்கோரை அடிப்பதற்கு அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு நாட்களை பயன்படுத்திக்கொண்டனர்.

முடிவு என்னாகும்?

முடிவு என்னாகும்?

இன்று இந்தியா விளையாடுவதற்கு 12 ஓவர்களே இருந்தன. மீதமுள்ள 3 நாட்களில் இந்தியா 480 ரன்களுக்கும் மேலாக அடித்துவிட்டு, அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை இரண்டு அணிகளும் விளையாட வேண்டும்.எனவே போட்டி சமனில் முடிவடைய தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.ஆனால் ரோகித் சர்மா விடுவதாக இல்லை.

ரோகித்தின் திட்டம்

ரோகித்தின் திட்டம்

இங்கிலாந்து அணி சமீப காலமாக பயன்படுத்தி வரும் பேஸ்பால் முறையை ரோகித் கையில் எடுத்திருக்கிறார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே உரிய நிதானத்தை கைவிட்டு,அதிரடியாக ஆடுவது தான் பேஸ்பால். தடுப்பாட்டம், அதிரடி என கலந்து எப்போது என்ன செய்வார்கள் என்பதே புரியாத வகையில் இருக்கும். இதில் இங்கிலாந்து பல வெற்றிகளை கண்டுள்ளனர்.

துணிச்சலான முடிவு

துணிச்சலான முடிவு

இந்திய களங்களில் இந்த முறையை பயன்படுத்த எந்தவொரு வீரரும் பரிந்துரைக்க மாட்டார்கள். ஆனால் அகமதாபாத் பிட்ச்-ல் பவுலர்களுக்கு எந்தவொரு உதவியும் பெரிதாக இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற களமாக மட்டுமே இருப்பதால் ரோகித் துணிச்சலுடன் களமிறங்கியுள்ளார். அதற்கேற்றார் போல 9 ஓவர்களில் இந்தியா 34 ரன்களுடன் ஆடி வருகிறது.

Story first published: Friday, March 10, 2023, 17:59 [IST]
Other articles published on Mar 10, 2023
English summary
Team India Skipper Rohit sharma took a last plan to comeback on 4th test against Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+