Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை ஏமாற்றினாரா ரோகித் சர்மா.. ? ஒரே புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.. உண்மை என்ன?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவியதற்கு ரோகித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பியதே காரணம் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் அரைசதம் விளாசிய ரோகித் சர்மா மற்ற அனைத்து போட்டிகளிலும் சொதப்பினார்.

இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் கூட ரோகித் சர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் ரோகித் சர்மாவை டி20 கிரிக்கெட் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

புகைப்படம்

புகைப்படம்

நியூசிலாந்து தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட ரோகித் சர்மா வங்கதேச தொடருக்கு திரும்புகிறார். தற்போது ரோகித் சர்மா மும்பையில் உள்ள மைதானத்தில் தனது பயிற்சி தொடங்கி இருக்கிறார். இதில் ஜிம் பயிற்சி, வலை பயிற்சி என பல்வேறு பயிற்சியில் ரோகித் சர்மா ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் ரோகித் சர்மா தாம் பேட்டிங் பயிற்சி செய்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அதில் ரோகித் சர்மா ஒரு புகைப்படத்தில் மட்டும் மெல்லிய உடல் தோற்றத்தில் இருப்பது போல் தெரிகிறது. இதனை எடுத்து ரசிகர் ஒருவர் ரோகித் சர்மா பயிற்சி செய்யவில்லை என்றும் இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அதனை மீண்டும் பதிவிட்டு தான் பயிற்சி செய்வதாக ரோகித் சர்மா பாவ்லா காட்டுவதாகவும் கூறியிருந்தார். இது ட்விட்டரில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

பலரும் ரோகித் சர்மா பயிற்சி செய்யாமல் இப்படி ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் ஷர்மா பயிற்சியை முடித்துவிட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பயிற்சி முடித்துவிட்டு வியர்வை களைப்புடன் இருக்கும் ரோகித் சர்மா ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

 பதிலடி

பதிலடி

மேலும் மும்பை வந்துள்ள, 19 வயது உட்பட்டவர்களுக்கான இந்திய வீராங்கனை மற்றும் நியூசிலாந்து வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற பல படங்கள் வெளியாகி இருக்கிறது. எனவே ரோகித் சர்மா பழைய படத்தை பதிவிடாமல் நேற்று நடந்த பயிற்சியை மட்டுமே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று தெள்ளத் தெளிவாக உறுதியாக இருக்கிறது.

Story first published: Saturday, November 26, 2022, 22:33 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+