ஒரே தொடரில் 2வது முட்டை.. தொடரும் ரோகித்தின் முட்டை சாதனை.. டி20 உலககோப்பை முன்னாள் இப்படியா ?
இந்தூர் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் டக் அவுட் ஆனார்.
இதன் மூலம், ஒரே தொடரில் 2 முறை டக் அவுட்டாகிய முதல் இந்திய கேப்டன் என்ற சோகமான சாதனையை ரோகித் படைத்தார்.
இதன் மூலம், ஒரு வருடத்தில் அதிக முறை டக் அவுட்டான இந்திய அணி கேப்டன் என்ற பெருமையையும் ரோகித்துக்கு கிடைத்தது.

ரோகித்தின் பணி
டி20 உலககோப்பையில் ரோகித் சர்மா ஒரு முக்கியமான வீரராக இருக்க வேண்டும். ரோகித் கொடுக்கும் தொடக்கத்தில் தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும். ரோகித் சர்மா பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பது இல்லை. 15 பந்தில் 30 ரன்கள் ரோகித் அடித்தாலே பேட்ஸ்மேனாக பணி அவருடைய சேர்ந்தது.

முதல் ஓவரில் ஆட்டமிழப்பு
அதே ரோகித் இப்படி டக் அவுட் அல்லது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும். ஏனெனில் கடந்த முறை டி20 உலககோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதுக்கு முக்கிய காரணமே ரோகித் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது தான்.

11 முறை டக்
ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஜோடி அந்த தவறை மீண்டும் செய்ய கூடாது. அவர் டக் அவுட்டாகும் போது எல்லாம் மற்ற வீரருக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதுவரை 11 முறை டக் அவுட்டாகி இருக்கிறார். இந்த முட்டை சாதனை இந்த தொடருடன் முற்றுப் புள்ளி வந்தால் நன்றாக இருக்கும்.

ரசிகர்கள் கிண்டல்
டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டக் அவுட்டாகி சொதப்பியதை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ரோகித் சர்மா கேப்டன் ஆனதும், அவருடைய பேட்டிங் பாதிக்கப்படவதாகவும், வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ரோகித் சர்மா திணறுவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications