Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப இதுக்கு என்ன பதில் சொல்றீங்க? இன்ஸ்டாகிராம் வரை சென்ற ரோஹித் சர்மா - கோலி மோதல்!

Recommended Video

Rohit Vs Virat : இன்ஸ்டாகிராம் வரை சென்ற ரோஹித் சர்மா - கோலி மோதல்!- வீடியோ

மும்பை : ரோஹித் சர்மா - விராட் கோலி மோதல் மறைமுகமாக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வரை சென்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அது குறித்து பிசிசிஐ விசாரணை செய்யும் என்றும் கூறப்பட்டது. ஆனால், பிசிசிஐ வீரர்கள் புகார் அளிக்கும் வரை விசாரணை செய்ய முடியாது என கூறியது. இந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கு பிசிசிஐ என்ன பதில் சொல்லப் போகிறது?

உலகக்கோப்பையில் கருத்து வேறுபாடு

உலகக்கோப்பையில் கருத்து வேறுபாடு

2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றோடு வெளியேறியது. அப்போது கோலி - ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் பரவின. கோலி எடுத்த சில முடிவுகள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா கருதியதாக கூறப்பட்டது.

என்ன செய்தார் ரோஹித்?

என்ன செய்தார் ரோஹித்?

அந்த விவகாரம் குறித்து மர்மம் நிலவி வரும் நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை பின்தொடரும் பட்டியலில் இருந்து தன் பெயரை நீக்கிக் கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா அன்பாலோ செய்து விட்டார் என்ற செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு அன்பாலோ செய்தார்

கடந்த ஆண்டு அன்பாலோ செய்தார்

கடந்த ஆண்டும் விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. அப்போது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்பாலோ செய்து இருந்தார் ரோஹித் சர்மா.

எப்போது துவங்கியது?

எப்போது துவங்கியது?

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே ஆன மோதல் கடந்த ஆண்டு வந்ததல்ல. அதற்கும் முன்பே துவங்கி விட்டது என்கிறார்கள். பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அணியில் ஒன்றாக ஆடி வருகிறார்கள். அதுவும், கேப்டன் - துணை கேப்டன் என்ற பதவிகளில் இருந்து கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்கள்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

உலகக்கோப்பைக்கு பின்பு கூட கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு வந்தது. பலரும் கோலியை நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், பிசிசிஐ எந்த மாற்றமும் செய்யவில்லை.

விளக்கம் அளிப்பாரா?

விளக்கம் அளிப்பாரா?

விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் ரோஹித் சர்மா அன்பாலோ செய்து விட்டாலும், ஏன் அப்படி செய்தார்? என்ன கருத்து வேறுபாடு என்பதை ரோஹித் சர்மா தான் கூற வேண்டும்.

Story first published: Friday, July 26, 2019, 11:08 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+