வெள்ளைப் பந்தில் நல்லா விளையாடுறீங்களே பாஸ்.. ரோஹித்துக்கு வார்னர் ஷொட்டு!
கான்பெரா: ரோஹித் சர்மா, வெள்ளை பந்தில் நன்றாக விளையாடுகிறார். அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரோஹித் சர்மா மட்டுமல்லாமல், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே ஆகியோரையும் அவர் பாராட்டியுள்ளார். இந்தியா தனது ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. இந்த நிலையில் நாளை நான்காவது ஒரு நாள் போட்டி கான்பெராவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியத் தரப்பில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி வருகிறார். முதல் இரு போட்டிகளில் அவர் சதம் போட்டார். அதில் இரண்டிலும் இந்தியா தோல்வி அடைந்தது. கோஹ்லி 3வது போட்டியில் சதமடித்தார். அப்போதும் இந்தியா தோல்வியடை்தது.
ரஹானே 2 அரைசதம் போட்டுள்ளார். இந்த மூன்று பேரும் சிறப்பாக ஆடியும் கூட இந்தியாவுக்கு வெற்றியைத் தொட்டுப் பிடிக்க முடியாத நிலை.

மீண்டும் வந்த வார்னர்
இந்த நிலையில் தனது மனைவிக்குப் பிரசவம் என்பதால் 2 மற்றும் 3வது போட்டிகளில் ஆடாமல் லீவில் சென்ற வார்னர் தற்போது நான்காவது போட்டிக்குத் திரும்பியுள்ளார். அவருக்குப் பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வந்த ஷான் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்குப் பாராட்டு
4வது போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய வார்னர், இந்திய அணியின் டாப் ஆர்டர் பிரமாதமாக உள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா அருமையாக ஆடி வருகிறார்.

கிரேட் கிரிக்கெட்
உண்மையில் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது. அருமையான ஆட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. ரோஹித் சர்மா மிகச் சிறப்பான பார்மில் உள்ளார்.

வெள்ளைப் பந்தை சிறப்பாக கையாளுகிறார்
ரோஹித் சர்மா வெள்ளைப் பந்தை சிறப்பாக கையாளுகிறார். மிகச் சிறப்பாக ஆடுகிறார். அதேபோல விராத் கோஹ்லியும், மிகச் சிறந்த ஆட்டத்தைக் கொடுத்து வருகிறார். நடுக்களத்தில் தூண் போல நிற்கிறார்.

ரஹானே
பிறகு அஜிங்கியா ரஹானே இருக்கிறார். பெரிய ஷாட்டுகளை படு லாவகமாக ஆடுகிறார். கடந்த 12 மாதங்களில் அவர் கடுமையாக உழைத்ததன் பலன் இது. அவர் ஐபிஎல் போட்டிகளில் மிக "ஈடுபாட்டோடு ஆடுவைதப் பார்த்துள்ளேன்.

நல்ல பார்ம்
இந்திய அணியின் பேட்டிங் நல்ல பார்மில் உள்ளது. ஆனால் 300 ரன்கள் போதுமானதாக இல்லை. இந்தியா போன்ற அணிகள் பெரிய ஸ்கோரை குவிக்கக் கூடியவர்கள். அதைத் தகர்த்து சேஸ் செய்வதற்கு நாங்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியுள்ளது என்றார் வார்னர்.


Click it and Unblock the Notifications