For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித், கோலி நிலைமை இதுதான்.. மற்ற வீரர்கள் தப்பிச்சுருவாங்க.. பிசிசிஐ அதிரடி திட்டம்.. கசிந்த தகவல்

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தகட்டமாக பயிற்சிகள் செய்ய உள்ளது.

Recommended Video

Rohit , Raina Picks Mumbai Indians-Chennai Super Kings XI

பிசிசிஐ அதற்கான பணிகளை துவங்கி உள்ளது. விரைவில் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய உள்ளனர்.

ஆனால், இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இரு முக்கிய வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என பிசிசிஐ-யில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

அந்த 3 வார்த்தை.. நானும், டிராவிடும் ஆஸி.வை இப்படித்தான் காலி செய்தோம்.. லக்ஷ்மன் சொன்ன ரகசியம்!அந்த 3 வார்த்தை.. நானும், டிராவிடும் ஆஸி.வை இப்படித்தான் காலி செய்தோம்.. லக்ஷ்மன் சொன்ன ரகசியம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே முற்றிலும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 85 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மும்பை நிலை

மும்பை நிலை

இதில் மும்பை நகரம் தான் இந்தியாவிலேயே மிக மோசமாக பாதிக்கபப்டுள்ளது. அங்கே 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 13,891 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த நகரத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.

லாக்டவுன் விதிகள்

லாக்டவுன் விதிகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடும் லாக்டவுன் விதிகள் அமலில் உள்ளன. அதனால் பல தொழில்களும் முடங்கி உள்ளன. கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது மட்டுமில்லாமல், கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகள் செய்ய முடியாத நிலையும் உள்ளது.

பிசிசிஐ அதிரடி திட்டம்

பிசிசிஐ அதிரடி திட்டம்

வீரர்கள் வீட்டிலேயே இருந்தால் அவர்கள் திறன் குறைய வாய்ப்பு உள்ளதால் பிசிசிஐ அதிரடியாக வீட்டிலேயே அவர்களை பயிற்சி செய்ய வைத்து அதை கண்காணித்து வருகிறது. லாக்டவுன் விதிகள் தளர்த்தப்படும் வரை இந்த முறையை பின்பற்ற உள்ளது.

கிரிக்கெட் பயிற்சி துவக்கம்

கிரிக்கெட் பயிற்சி துவக்கம்

தற்போது இந்த பயிற்சிக்கென பிரத்யேக செயலியை உருவாக்கி உள்ளது பிசிசிஐ. அதன் மூலம், கிரிக்கெட் வீரர்கள் என்ன பயிற்சி செய்கிறார்கள்? அவர்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை கூறி, கண்காணித்து வருகிறது பயிற்சியாளர்கள் குழு.

விரைவில் களப் பயிற்சி

விரைவில் களப் பயிற்சி

லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு, வெளியே செல்ல அனுமதி கிடைத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு அருகே உள்ள மைதானம் அல்லது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும்.

ரோஹித், கோலி நிலை

ரோஹித், கோலி நிலை

ஆனால், மற்ற வீரர்கள் பயிற்சி பெற வெளியே வந்தாலும், முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வீட்டை விட்டு வெளியே வர முடியாது என கூறப்படுகிறது. அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் இருக்கிறார்கள்.

வீட்டில் தான் இருக்க வேண்டும்

வீட்டில் தான் இருக்க வேண்டும்

எனவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் பயிற்சி செய்ய முடியாது என ஒரு பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சி மட்டுமே செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியுமா?

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியுமா?

இந்த நிலையில், மற்ற இந்திய வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தயார் ஆனாலும் கோலி, ரோஹித் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 16, 2020, 14:04 [IST]
Other articles published on May 16, 2020
English summary
Rohit Sharma, Virat Kohli cannot practice while other players starts their field practice says BCCI sources.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X