வீடியோ - திருப்பதி கோயிலில் ரோகித் சர்மா தரிசனம்.. ஆசிய கோப்பை, உலக கோப்பை முன்பு மனைவியுடன் வருகை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு கேப்டன் ரோகித் சர்மா தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டார்.
உலகிலே மிக பணக்கார கடவுளாக கருதப்படுபவர் வெங்கடாசலபதி இந்தக் கோயிலுக்கு சாதாரண மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோயிலுக்கு சினிமா நட்சத்திரங்கள் தங்களுடைய படங்கள் ஹிட்டானாலும் படம் ரிலீஸ் க்கு முன்பாகவும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அவ்வளவு ஏன் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே ஐந்தாவது முறையாக வென்ற பிறகு நேரடியாக கோப்பை வெங்கடாசலபதி முன் வைக்கப்பட்டு பிறகு தான் சென்னை கொண்டுவரப்பட்டது.இந்த நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி செப்டம்பர் இரண்டாம் தேதி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பெங்களூருவில் ஒரு வாரம் பயிற்சி செய்ய இருக்கிறார்கள்.
இந்த தொடர் முடிந்து உடனடியாக ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தற்போது இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா விராட் கோலி போன்ற வீரர்களுக்கு அயர்லாந்து தொடரில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக முன்னணி வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் பரோகித் சர்மா உலக கோப்பையையும் ஆசிய கோப்பையும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் தரிசனத்தை பெற திருப்பதி சென்று தான் ரோகித் சர்மா தனது மனைவியுடன் வந்தவுடன் அங்கிருந்த பக்தர்கள் ரோகித் சர்மாவை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனை அடுத்து போலீசார் பத்திரமாக ரோகித் சர்மாவையும் அவரது மனைவியும் அழைத்துச் சென்றனர். இதனால் திருப்பதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications