
ரசிகர்கள் கோபம்
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர், டி20 உலககோப்பையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது. இதனால், ரோகித் சர்மாவுக்கு வங்கதேச தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்துள்ளது.

ரோகித் பயிற்சி
இதனிடையே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற ரோகித் சர்மா இந்திய அணியின் யுத்திகளை மாற்றினார். அக்சர் பட்டேலை அணிக்குள் கொண்டு வந்தார். பேட்டிங்கில் மீண்டும் ரன் குவிக்க நேற்று, ரோகித் கடும் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் ரோகித் பழைய பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

காயம்
ஆனால், இன்று ரோகித் சர்மா ஃபில்டிங் செய்யும் போது, முகமது சிராஜ் பநதுவீச்சில் அனாமுல் ஹக் அடித்த பந்து, ஸ்லிப்பை நோக்கி பறந்தது. அப்போது பந்தை பிடிக்க முயன்ற போது, ரோகித் சர்மாவின் கையை பந்து பதம் பார்த்தது. இதனையடுத்து ரோகித் சர்மா வலியால் போட்டியிலிருந்து விலகினார்.

மருத்துவமனைக்கு சென்றார்
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு ரோகித் சர்மா கொண்ட செல்லப்பட்டு, அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவிலேயே ரோகித் சர்மா இந்த தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்று தெரியவரும். மற்போது ரோகித் களத்தில் இல்லாததால், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











