Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நாலு பக்கமும் கண்ணிவெடி” சங்கடத்தில் சிக்கிய ரோகித் சர்மா.. 2வது ODIக்கான ப்ளேயிங் 11ல் கடின முடிவு

கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் என்ன செய்வதென்று புரியாமல் சங்கடத்தில் சிக்கியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடக்கும்.

2வது போட்டி

2வது போட்டி

இந்நிலையில் இந்தியா பலமாக உள்ள போதும் ப்ளேயிங் 11ல் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சிக்கியுள்ளார். ஓப்பனிங்கில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் சேர்க்கப்படாமல் இருக்கிறார். முதல் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக 70 ரன்களை அடித்துவிட்டதால் டாப் ஆர்டரில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 3வது வீரராக விராட் கோலியும், 4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும் உறுதி செய்துவிட்டனர்.

ஸ்டார் வீரர் புறகணிப்பு

ஸ்டார் வீரர் புறகணிப்பு

மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் புறகணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. சீனியர் வீரர் கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி கம்பேக் தந்தார். இதனால் சூர்யகுமாரை மீண்டும் ஒருமுறை புறகணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. உலகின் நம்.1 டி20 பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் நன்றாக விளையாடி வரக்கூடிய ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும்.

பவுலிங்கில் தலைவலி

பவுலிங்கில் தலைவலி

இதனைவிட பெரிய தலைவலியாக பவுலிங்கிலும் உள்ளது. சுழற்பந்துவீச்சில் அக்‌ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திர சாஹல் ஜோடி சேர்ந்து வருகின்றனர். இதில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவை நீண்ட நாட்களுக்கு வெளியே உட்காரவைக்க முடியாது. மறுபுறம் கடந்த போட்டியில் யுவேந்திர சாஹல் ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதனால் என்ன செய்வதென்ற குழப்பம் சூழ்ந்துள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் வழக்கம் போல முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகமது ஷமி கூட்டணி அமைக்கின்றனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

Story first published: Thursday, January 12, 2023, 10:05 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+