
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
ஐபிஎல் 2020 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ப்ளே ஆப் சுற்றில் பங்கேற்று விளையாடி தனது அணிக்கு ஐந்தாவது கோப்பையை பரிசாக பெற்றுத் தந்தார்.

டெஸ்ட் போட்டியில் இடம்
இதனிடையே அவரது காயம் காரணமாக அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு விராட் கோலியே காரணம் என்று கூறப்பட்டது. சர்ச்சைகள் வெளியானதும் இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியலில் ரோகித்தின் பெயர் இடம்பெற்றது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் பெயர் இடம்பெற்றது.

நிரூபித்த ரோகித் சர்மா
ஆயினும் தனது பிட்னசை 70 சதம் மட்டுமே நிரூபித்துள்ளதாகவும், தொடர்ந்து சோதனை இன்று நடத்தப்படும் என்றும் அதையொட்டியே அவரது ஆஸ்திரேலிய பயணம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய பரிசோதனையில் தன்னை மற்றும் தன்னுடைய பிட்னசை நிரூபித்து தேறியுள்ளார் ரோகித் சர்மா.

வெற்றி பெற்ற ரோகித்
இதற்கென ஐபிஎல்லுக்கு பிறகு என்சிஏவில் தனது பிட்னசை நிரூபிக்கும் வகையிலும் காயத்திலிருந்து தேறும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டார் ரோகித் சர்மா. எடைகுறைப்பிலும் ஈடுபட்டு அதிலும் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலும் அது எதிரொலித்தது.

குவாரன்டைன்... பயிற்சி
இதையடுத்து வரும் 13ம் தேதி மும்பையிலிருந்து துபாய் செல்லும் ரோகித் சர்மா அங்கிருந்து சிட்னிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து சிட்னியில் குவாரன்டைனில் 14 நாட்கள் ஈடுபடவுள்ள ரோகித் சர்மா, இடையில் பயிற்சியிலும் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











