Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைமுதல் அணியில ஜாய்ன் ஆகறாராம் ஹிட்மேன்... அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்திய அணி!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா இல்லாத இளம் வீரர்கள் அடங்கிய அணி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் 7ம் தேதி துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ள இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா நாளை முதல் அணியில் இணையவுள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பெலளர்கள், பேட்ஸ்மேன்கள் என போட்டிப் போட்டுக் கொண்டு இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

எதிரணிக்கு செய்தி

எதிரணிக்கு செய்தி

ஒரு போட்டியில் மோசமான தோல்வி அடைந்தால் இந்தியாவை முடக்கிவிட முடியாது என்ற செய்தியை இந்திய அணியின் கேப்டன் ரஹானே தனது சதம் மூலம் எதிரணியினருக்கு தெரிவித்துள்ளதாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பலம் கூடும் என எதிர்பார்ப்பு

பலம் கூடும் என எதிர்பார்ப்பு

விராட் கோலி, முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட சர்வதேச திறன்மிக்க வீரர்கள் இல்லாத இளம் அணி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா இணையவுள்ளது அணிக்கு மேலும் பலத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்ன் பயணம்

மெல்போர்ன் பயணம்

இதனிடையே, அவர் நாளை முதல் இந்திய அணியின் பயோ பபளில் இணைந்து பயிற்சி ஆட்டங்களை ஆடவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையொட்டி அவர் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 29, 2020, 10:29 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+