Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்கு ஓய்வு...கேப்டனாகும் ரோஹித் ஷர்மா... புதிய முடிவில் பிசிசிஐ!

டெல்லி: தொடர்ந்து போட்டிகளால் விளையாடி வருவதால் கோஹ்லிக்கு சில போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவருக்கு சில போட்டிகளில் மட்டும் ஒய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

கோஹ்லிக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டனுக்கு தகுதியான நபராக பார்க்கப்படும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனுக்கான வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாட இருக்கின்றது. மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை நடக்க இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றது..

 அடுத்தடுத்து நடக்கும் தொடர்கள்

அடுத்தடுத்து நடக்கும் தொடர்கள்

இந்த இலங்கை தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மிக முக்கியமான தொடரை 2018 ஜனவரி தொடக்கத்தில் விளையாட இருக்கின்றது. மிகவும் பெரிய தொடரான இது ஜனவரி 5ல் ஆரம்பித்து பிப்ரவரி 24 வரை நடக்க இருக்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என மாதக்கணக்கில் நடக்க இருக்கும் போட்டியாகும் இது. இந்த போட்டிக்காக இந்திய அணியை புதிய வகையில் தயார் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

இந்த நிலையில் அடுத்தடுத்து தொடர் போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்துவிடக் கூடாது என புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மோதும் தொடர் மிகவும் முக்கியமான தொடர் என்பதால் அதற்கு முன்பு சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து இலங்கை தொடருக்கு புஜாரா, அஸ்வின், ஜடேஜா, சாகா, முரளி விஜய் ஆகியோர் களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது. ரஹானே, தவான், பாண்டியா கியோருக்கு ஓய்வு அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகி உள்ளது.

 இந்தியாவுக்கு புதிய கேப்டன்

இந்தியாவுக்கு புதிய கேப்டன்

இந்த நிலையில் அணியில் ஓய்வு கொடுக்க முடியாத ஒரே நபராக விராட் கோஹ்லி மட்டுமே இருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக இலங்கை டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க முடியாது. ஆகவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தொடரில் டி-20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு அளிக்க யோசனை செய்யப்பட்டு வருகின்றது. அப்போதுதான் அவர் அடுத்து வரும் தொடர்களில் சரியா பர்பார்ம் செய்ய முடியும். கோஹ்லிக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டனுக்கு தகுதியான நபராக பார்க்கப்படும் ரோஹித் சர்மாவுக்கு டி-20 போட்டியில் கேப்டனுக்கான வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Story first published: Monday, October 23, 2017, 10:48 [IST]
Other articles published on Oct 23, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+