Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட அறிமுக வீரர் மிட்செல் ஓவன்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அறிமுக வீரர் மிட்செல் ஓவனின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 55 ரன்கள் மற்றும் ரோஸ்டன் சேஸ் 60 ரன்கள் எடுத்து இருந்தனர். அவர்களின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றது. அப்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் ட்வார்ஷியஸ் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி, ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Rookie Mitchell Owen Shines on Debut as Australia Clinches Thrilling Win Over West Indies

அவர் மொத்தமாக 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுவே அவரது டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாகும். இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.


ஆஸ்திரேலியாவின் சேஸிங்:

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சற்று தடுமாறியது. 9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் மிட்செல் ஓவன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி, ஐந்தாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. குறிப்பாக, கடந்த பிக் பேஷ் லீக் (BBL) தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த மிட்செல் ஓவன், இந்தப் போட்டியில் வெறும் 27 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேமரூன் கிரீன் 26 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இவர்களின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருக்க, 190 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் மிட்செல் ஓவன் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இதே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.

Story first published: Monday, July 21, 2025, 10:42 [IST]
Other articles published on Jul 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+