Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேரி சோபர்ஸ் சாதனையை 'சரியாக' 50வது ஆண்டில் சமன் செய்த சேஸ்

ஜமைக்கா: நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்களைக் குவித்த மேற்கு இந்திய தீவுகள் வீரர் ரோஸ்டன் சேஸ் முன்னதாக முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இது ஒரு சாதனையாகும்.

4 டெஸ்ட்டுகளில் ஆடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் சென்றுள்ளது. முதல் டெஸ்டை இந்தியா வென்ற நிலையில், ஜமைக்காவில் 2வது டெஸ்ட் நடந்தது. முதலில் மே.இ.தீவுகள் பேட் செய்தது.

Roston Chase equals Garry Sobers' 50-year record against India

மேற்கு இந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸ்சில் 196 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் இதில் முக்கிய பங்கு வகித்தது.

2வது இன்னிங்சில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்ட நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 (டிக்ளேர்) செய்தது. கே.எல்.ராகுல் 158, ரஹானே ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்து இந்த ரன் குவிப்புக்கு உதவினர்.

Roston Chase equals Garry Sobers' 50-year record against India

இந்தியாவின் முதல் இன்னிங்சில் ரோஸ்டன் சேஸ் 121 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2வது இன்னிங்சில் சதம் அடித்தார். அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவர் 5 விக்கெட்டைகளை வீழ்த்தி, அதே போட்டியில் சதமும் அடித்தது இது 3வது முறை.

1996ல் மேற்கிந்திய தீவுகள் வீரர் கேரி சோபர்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக ஹெட்டிங்லியில் நடந்த போட்டியில் 174 ரன்களை குவித்ததோடு, 41 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது ஒரு சாதனையாக இருந்து வந்தது.

அந்த போட்டி சரியாக 50 வருடங்கள் முன்பு, அதாவது ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்றது. 50 வருடங்கள் பிறகு அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.

இதன் முன், பின் அதே சோபர்ஸ் இருமுறையும், டென்னிஸ் அட்கின்சன், கூலி ஸ்மித் ஆகியோர் தலா ஒருமுறையும் இதேபோன்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். செயின்ட் லூசியாவில் 9ம் தேதி முதல் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 4, 2016, 11:47 [IST]
Other articles published on Aug 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+