Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs RCB: நீ.. கெயில்னா.. நான் கோலி...! பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்த பெங்களூரு

சண்டிகர்: 174 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி உள்ள பெங்களூரு அணி ஒரு அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. கோலி அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

இதுவரை விளையாடிய போட்டிகளில் ஜெயிக்கவே இல்லை. புள்ளிகளும் இல்லை. இப்போதாவது கணக்கை துவங்கலாம் என்ற பெங்களூரு அணிக்கு, பஞ்சாப் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மொகாலியில் நடைபெறும் இந்த போட்டியில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று வெறியில் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேலும், கேப்டன் கோலியும் களம் இறங்கினர். என்ன நினைத்தாரோ..தெரியவில்லை... படேல் 19 ரன்களில் நடையை கட்டி விட்டார்.

ரன்குவிப்பு

ரன்குவிப்பு

அதற்கு பிறகு.. கோலியுடன் கைகோர்த்தவர் ஏபி டிவில்லியர்ஸ்.. அதிரடி மன்னனான இவர்.. வந்த வேகத்தில் ரன்களை குவிக்க தொடங்கினார். கோலியும் விடவில்லை.

பந்துகள் பறந்தன

பந்துகள் பறந்தன

அவரும் தம் பங்குக்கு வெளுக்க... பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களின் எக்னாமிக் ரேட் எகிறியது. முகமது சமியின் பந்துகளும், கர்ரன் பந்துகளும் பவுண்டரிகளாக பறந்தன.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

ஒரு ஓவருக்கு சராசரியாக 9 முதல் 10 ரன்களை இருவரும் குவிக்க ஆரம்பித்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் கோலி... அரைசதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக டி வில்லியர்சும் ரன்களை எடுத்ததார்.

எளிதாக 100 ரன்கள்

எளிதாக 100 ரன்கள்

12வது ஓவரிலே... பெங்களூரு அணி மிக எளிதாக 100 ரன்களை கடந்தது. கிட்டதட்ட 12 ஓவர்களை கடந்த போதும், பெங்களூரு அணி ஒரு சிக்சரை கூ அடிக்கவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆனாலும்... களத்தில் கோலி நிற்கிறார். ஆகையால் இம்முறை நிச்சய வெற்றி தான்.. புள்ளிப்பட்டியலில் இடம் தான் என்று பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

Story first published: Saturday, April 13, 2019, 23:32 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+