Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI Vs RCB: ஆகா.. மிஸ்டர் 360 அற்புதம்.. மும்பைக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த பெங்களூரு

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டி வில்லியர்சும், மொயின் அலியும் அபாரமாக ஆடி அரைசதம் கண்டனர். பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை குவித்தது.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக நடைபெற்று வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 30 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

1
45907

31வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மாற்றம் கிடையாது

மாற்றம் கிடையாது

இதையடுத்து பெங்களூரு அணி களம் இறங்கி உள்ளது. இன்றைய போட்டிக்கான பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண்கின்றனர்.

மலிங்காவுக்கு வாய்ப்பு

மலிங்காவுக்கு வாய்ப்பு

ஆனால் மும்பை அணியில் மாற்றங்கள் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக அல்ஜாரி ஜோசப் விளையாடாததால் அவருக்கு பதிலாக லசீத் மலிங்கா அணியில் இடம்பிடித்துள்ளார்.

படேல் அவுட்

படேல் அவுட்

முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேலும், கோலியும் களம் இறங்கினர். ஓவர் நிதானமாக ஆடி வரும் பார்த்தீவ் படேல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அருமையான ஜோடி

அருமையான ஜோடி

8 ரன்களில் கோலியும் வெளியேற... பெங்களூரு அணி தடுமாறியது. அதன் பின்னர் 3வது விக்கெட்டுக்கு டி வில்லியர்சும், மொயின் அலியும் கை கோர்த்தனர். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இருவரும் ஒன்றிணைந்து ஆடினர்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

மெதுவாக ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் ஒரு கட்டத்தில் ரன் விகிதத்தில் வேகம் காட்டினர். சீரான இடைவெளியில் ரன்கள் குவிந்தன. அந்த ஜோடியை பிரிக்க மும்பை பந்துவீச்சாளர்கள் முயன்றனர். எதற்கும் பலன் கிடைக்க வில்லை. டி வில்லியர்சும், மொயின் அலியும் நங்கூரமாக நின்றனர். இருவரும் 17வது ஓவரில் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

மொயின் அலி

மொயின் அலி

டி வில்லியர்சை விட குறைந்த பந்துகளை எதிர்கொண்ட மொயின் அலி அபாரமாக ஆடி அரைசதத்தை எட்டினார். 18 வது ஓவரில் மலிங்கா பந்துவீச்சில் மொயின் அலி அவுட்டானார். அதே ஓவரில் ஸ்டோய்ன்சும் டக் அவுட்டானார்.

171 ரன்கள் குவிப்பு

171 ரன்கள் குவிப்பு

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்கள் வந்து குவிந்த போதிலும் விக்கெட்டுகள் விழுந்தன. குறிப்பாக டி வில்லியர்ஸ் ரன் அவுட்டானார். 20வது ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. முடிவில் பெங்களூரு அணி 171 ரன்கள் குவித்தது.

Story first published: Monday, April 15, 2019, 22:10 [IST]
Other articles published on Apr 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+