Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC: ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம் .. டெல்லியை வீழ்த்த திட்டத்தை மாற்றும் டூ பிளஸிஸ்!

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெற்றிடாத டெல்லி அணியை எதிர்த்து சொந்த மண்ணில் லக்னோ அணியிடம் மோசமான தோல்வியடைந்த பெங்களூரு அணி விளையாடுகிறது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு டெல்லி அணியின் பேட்டிங்கே காரணமாக உள்ளது. டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேலை கடந்து வேறு எந்த பேட்ஸ்மேனும் சொல்லிக் கொள்ளும் வகையில் பேட்டிங் செய்யவில்லை.

Royal Challengers Bangalore to play against Delhi Capitals in IPL 2023

அதேபோல் டேவிட் வார்னரும் 4 போட்டிகளில் 209 ரன்கள் குவித்திருந்தாலும், அவரின் ஸ்ட்ரைக் 118ஆக மட்டுமே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போல் ஆடுவதால், டெல்லி அணியின் ஸ்கோரை எதிரணிகள் எளிதாக சேஸ் செய்துவிடுகின்றனர். இருப்பினும் மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், பேட்டிங் வரிசையில் பலம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூரு மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடிக்க முடியும் என்பதால், வெற்றிக்காக டெல்லி அணி போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

மறுபக்கம் பெங்களூரு அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக லக்னோ அணிக்கு எதிரான தோல்வி அந்த அணியை வெகுவாக அசைத்து பார்த்துள்ளது. சொந்த மண்ணில் 200 ரன்களுக்கு மேல் விளாசியும் ஆர்சிபி தோல்வியடைவது புதிதல்ல. இருப்பினும் ஆர்சிபி அணிக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதுதான். அதேபோல் பந்துவீச்சு தான் ஆர்சிபி அணியின் பிரச்சனையாக உள்ளது.

அதனை மாற்றவே ஹசரங்கா அணியுடன் இணைந்துள்ளார். இதனால் டேவிட் வில்லி அல்லது வெய்ன் பார்னல் ஆகிய இருவரில் ஒருவர் இன்றையப் போட்டியில் நீக்கப்படலாம். இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள 27 போட்டிகளில் 10 போட்டிகளில் ஆர்சிபி அணியும், 7 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன. இன்றையப் போட்டியிலும் சேஸிங் செய்யும் அணிக்கே பிட்ச்சில் சாதகம் இருக்கும் என்பதால், வெற்றியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 15, 2023, 9:11 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+