Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs RCB: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச முடிவு.. வெற்றி பெறுமா

சண்டிகர்: மொகாலியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீசுகிறது.

1
45904

பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி ராஜஸ்தான், மும்பை, டெல்லி, ஐதராபாத்தை வென்றது. கொல்கத்தா, சென்னை, மும்பையிடம் தோல்வி கண்டது.

சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கெய்ல், அகர்வால், மில்லர், சாம் குர்ரான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அனைத்திலும் தோல்வி

அனைத்திலும் தோல்வி

பெங்களூர் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. சென்னை, மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளிடம் தோற்று போனது .

முற்றுப்புள்ளி வைக்குமா?

முற்றுப்புள்ளி வைக்குமா?

பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்திலாவது முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்று நம்பலாம்.

அணி விவரம்

அணி விவரம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், நிக்கோலஸ் பூரன், மன்டிப் சிங், சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின் , ஆண்ட்ரூ டை, முகமது ஷமி, முருகன் அஸ்வின்.

யார்? யார்?

யார்? யார்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்: விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மொயின் அலி, அக்ஷ்திப் நாத், பவன் நெகி, உமேஷ் யாதவ், சாஹல், சைனி, முகமது சிராஜ்.

Story first published: Saturday, April 13, 2019, 20:23 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+