Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 2 காலிறுதி ஆட்டம் இருக்கு.. நான் எதையும் செய்யல..எல்லாம் ஜெய்ஷ்வால் பார்த்துகிட்டாரு-சாம்சன்

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதன வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை கொத்து பரோட்டா போல் ஆக்கியது.

150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் 13 புள்ளி ஒன்று ஓவரில் எல்லாம் எட்டியது. இன்றைய ஆட்டத்தில் சாகல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சாகலின் சாதனையை மறைப்பது போல் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் எல்லாம் அரை சதம் வடித்து அசத்தினார்.

RR Captain sanju samson says their team need to win another 2 games

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சஞ்சு சாம்சன், இன்றைய ஆட்டத்தில் நான் பேட்டிங்கில் எதுவுமே செய்ய தேவையில்லை. சிங்கிள்ஸ் எடுத்து ஜெய்ஸ்வாலிடம் பேட்டிங்கை கொடுத்து நான் அவர் விளையாடுவதை பார்த்துக் கொண்டுதான் நின்றேன். ஜெய்ஸ்வாலுக்கு பவர்பிளே என்றால் மிகவும் பிடித்திருக்கிறது.

பவர் பிளேவில் அவர் நன்றாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோன்று சாகலின் சாதனையை யாரும் மறந்து விடக்கூடாது. அவருக்கு லேஜன்ட் என்ற பட்டத்தை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாகல் எங்கள் அணியில் விளையாடுவது நினைத்து பெருமைப்படுகிறோம். அவர் கையில் பந்தை கொடுத்தால் போதும் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.

கடைசி கட்டத்தில் லேக் ஸ்பின்னரை பயன்படுத்தலாம் என்ற தைரியத்தை கொடுத்ததே அவர்தான். இன்னும் எங்களுக்கு இரண்டு கால் இறுதி ஆட்டம் இருக்கிறது. எங்களுக்கு இன்னும் அழுத்தம் இருக்கிறது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஜெய்ஸ்வால் பட்லர் பேட்டிங் போது ரன் அவுட் ஆனவுடன் பட்லர் ஜெய்ஸ்வாலே சமாதானப்படுத்தி சென்றதை பார்த்தாலே எங்கள் அணியின் சூழல் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும் என்று சாம்சன் கூறினார்.

Story first published: Friday, May 12, 2023, 0:02 [IST]
Other articles published on May 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+