Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15 ஆண்டுக்கால சாதனையை உடைத்த ஜெய்ஷ்வால்.. 21 வயதில் இப்படி ஒரு நிகழ்வா? வேற லெவல் பேட்ஸ்மேன்

தர்மசாலா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மீண்டும் அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஜெய்ஸ்வால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 ஆண்டு நீடித்த ரெகார்ட் ஒன்றை முறியடித்திருக்கிறார்.

ஜெய்ஸ்வால் தன்னுடைய 18 வது வயதில் முதல்முறையாக விளையாடினார் அதில் மூன்று போட்டிகளில் விளையாடின் 40 ரன்கள் ஜெயிஸ்வால் அடித்தார் அதன் பிறகு 19 ஆவது வயதில் ஜெய்ஸ்வால், 10 போட்டிகளில் விளையாடி 249 ரன்களை அடித்தார்.

RR star Yashasvi jaiswal breaks 15 year old ipl record

இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதனை அடுத்து கடந்த ஆண்டு மீண்டும் தனது திறமையை நிரூபித்த ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். எனினும் தன்னுடைய முழு திறமையையும் ஜெய்ஸ்வால் நடப்பு சீசனில் தான் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த சீசனில் ஜெய்ஸ்வால் ஒரு சதம் மற்றும் 5 அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் 164 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார்.

இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 657 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 50 ஆகும். இந்த சீசனில் ஜெய்ஸ்வால் 87 பவுண்டரிகளையும், 26 சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு ரெக்கார்டை ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ஷான் மார்ஸ் இந்த ரெக்கார்டை படைத்திருந்தார். தற்போது அதனை 21 வயதில் ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார். ஷான் மார்ஸ் இந்த சாதனை படைத்திருக்கும் போது ஜெய்ஸ்வாலுக்கு வெறும் ஆறு வயது தான் இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலை இந்திய அணியில் விரைவில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Story first published: Friday, May 19, 2023, 23:20 [IST]
Other articles published on May 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+